பக்கம்:சிலம்புநெறி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலம்பு நெறி ☐ 11

களை விடக்கூட இந்த வங்கு மனம் கொண்ட நாய்கள் தொல்லை தர முயலும். ஆதலால் வாழ்க்கையில் வெற்றிகளைப் பெற அல்லது பொருளைப் பொருதொழிய நட்போ, பகையோ முற்றாகக் காரணங்களாகா! வாழ்கின்றவனுடைய மன உறுதிதான் காரணமாக முடியும்.

புதை மணலில், சகதியில் அகப்பட்டுக் கொண்ட உரம் மிக்க காளைகள் படுக்கா! தலையைக் குனிந்து மூச்சை அடக்கி, காலை மடக்கி எழும். அந்த முயற்சியைப் பார்த்தாவது மனிதன் தன் முயற்சியைப் பற்றி கற்றுக் கொள்ளவேண்டும்.

ஏதாவதொன்றைச் செய்து கொண்டிருப்பவர்கள் எல்லோரும் முயற்சி உடையார் என்று ஏற்றுக் கொள்ளப் பெற மாட்டார்கள். வேலைகள் குறித்த வேளைகளில் குறித்த பயன் கூடும் வண்ணம் செய்து முடிக்கப் பெறுதல் வேண்டும்.

இன்று, கடமைகளை காலத்தில் செய்பவர்களைக் காண்பதரிது. அது ம ட் டு மா? எந்த ஒரு பணியையும் கடமையாகச் செய்து வெற்றி காணாமல் இடையறவுபட்டு அல்லலுறுவோர் பலர். ஒரு சிறு இடர்ப்பாட்டைக்கூடத் தாங்க முடியாமல் துன்புறுவோர் எப்படி வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்க முடியும்?

அறிவியல் முறைப்படி இடர்ப்பாடுகளும் துன்பங் களும், வாழும் உயிர்ப்புள்ள மனிதனைத் தூண்டித் தொழிற்படுத்தி வளர்க்கும்.

சோழன் க ரி கா ல ன் வடபுலம் நோக்கிப் படையெடுத்துச் செல்கிறான். வடபுலத்து நிலங்கள் எல்லாம் அவன் வெற்றியை ஏற்றுக்கொண்டன. தமிழ்ப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/13&oldid=1371631" இலிருந்து மீள்விக்கப்பட்டது