பக்கம்:சிலம்புநெறி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - தவத் திரு குன்றக்குடி அடிகளார்

ஒழுக்கத்தை மாற்றிப் புதுமை செய்தாள் மாதவி. தமிழ் நாட்டில் பரத்தமையை அகற்றும் முயற்சியைத் தொடங்கியது சிலம்பு விளைவித்த புதுமை.

கோவலன் மதுரைக்கு வருகிறான். புதிய வாழ்க்கை. யைத்தொடங்க சிலம்பை விற்கநினைக்கிறான். சிலம்பை விற்கப் பாண்டிய நாட்டுத் தலைநகரின் கடைவீதிக்குச் செல்கிறான். கோவலனிடம் உள்ள சிலம்பு கடைவீதியில் விற்கக்கூடியது அல்ல; சாதாரண மக்கள் வாங்கக்கூடிய சிலம்பும் அல்ல. பாண்டிய அரசன் வாங்கவேண்டும் அல்லது மிகப்பெரிய வணிகர்கள் வாங்க வேண்டும். இத்தகு விலை உயர்ந்த சிலம்பை விலை கூற, மதுரை நகர வீதிகளில் மறுகி மறுகி நடக்கிறான்.

கோவலன் தனது வீழ்ச்சியை நினைத்து - மதுரை நகரில் சிலம்பை விலை கூறி வாழ நேரிட்டதே என்று. வெட்கப்பட்டு மறைவாக விலை கூறி விற்க நினைத்து: மறுகுகிறான். தன் நிலைக்கு இரங்குகிறான்; வெட்கப் படுகிறான். நாடறிந்த வணிகக் குடும்பத்தைச் சேர்ந்தவன். குடும்பப் புகழ் போய்விடக் கூடாதே. என்பது கோவலனின் கவலை.

- தன்னை உணரும் திறன் படைத்த சராசரி மனிதனின்: உள்ள இயல்பு இது. உளவியல் பாத்திரப் படைப்பில் சிந்தனை செய்து திருத்திக் கொள்ளும் பாத்திரமாக கோவலனைப் படைத்த்து இலக்கிய உலகில் சிலம்பே. ஆதலால் கோவலன் இலக்கிய உலகில் வாழ்கிறான்.

கோவலன் தன்னிலை தாழ்ந்தமையை எண்ணி வெட்கிப் போனதாலேயே கொலைக் களத்தில் தான்் கள்வனல்ல என்று கூறாமல், மறுக்காமல், வாதாடாமல்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/132&oldid=702795" இலிருந்து மீள்விக்கப்பட்டது