பக்கம்:சிலம்புநெறி.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி ( 13 !'

திகைப்புண்டு மெளனம் சாதிக்கிறான். ஆங்குப் பேச நேரின் குடும்பம், சோழப் பேரரசு முதலியவற்றை. எடுத்துக் கூற வேண்டிவரும். அது கரயல்ல; புகழும்: தராது என்று எண்ணியே மெளனம் சாதிக்கிறான். குல. மரபு காக்கப் பழியைச் சுமந்து கொலைக்குக் கோவலன் உடன்பட்டது கோவலனின் உயிர் மானமாக இருந்தது என்று உணர்த்துவது புதுமை, -

கோவலன் கள்வன் என்று பழி சுமத்தப்பட்டுக் கொல்லப்பட்டு விட்டான் என்ற செய்தி கண்ணகிக்குக் கிடைக்கிறது. கண்ணகி உணர்ச்சி வசப்படாமல் அறிவை இழக்காமல் நடந்து கொண்டமுறை இலக்கிய உலகத்திற்கோர் புதுமை -

கண்ணகி ஆற்றொனாத் துயரத்திற்காளானாலும் அழுது புலம்பியவாறு உட்கார்ந்து விடவில்லை. கண்ணகி யின் அவல நிலையிலும் அறிவு தலைப்படுகிறது; போர்க் குணம் தலைப்படுகிறது. செய்ய வேண்டுவனவற்றைச் செய்கிறாள்; செய்யத் தலைப்படுகிறாள். சிலம்பில் வழக்குரை காதை அற்புதமான படைப்பு. - -

கண்ணகி நடந்தனவற்றை பாதிக்கப் பெற்ற கோவலனிடம் கேட்டறிய முதலில் விரும்புகிறாள்; நேரே கொலைக் க ள த் தி ற்கு ச் செல்கிறாள். இங்கு இளங்கோவடிகள், இயற்கை இகந்த நிலையில் கோவல னின் வெட்டுண்ட தலை கண்ணகியுடன் பேசுவதாக காட்சி அமைத்திருக்கிறார். இந்தக் காட்சி அவசிய மானது. . . . . . . .

நேரிடையான வாக்கு மூலம்-சாட்சி 24ωτιsώ எப்படி வழக்கை நடத்த இயலும்? ஆட்சிமுறைச் சட்டிங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/133&oldid=702796" இலிருந்து மீள்விக்கப்பட்டது