பக்கம்:சிலம்புநெறி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12☐தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பேரரசு கால்கொள்கிறது. இந்தியாவுக்கு அப்பாலும் செல்ல ஆவல்! ஊக்கம்! ஆனால், இமயமலை குறுக்கே நிற்கிறது! இமயமலை உச்சியில் தமிழ்ப்பேரரசின் சின்னம் பொறிக்கப் பெறுகின்றது!

கரிகாலன் எதிர்பாராது சோழ அரசுக் கட்டிலில் ஏறியவன்! ஆயினும், சோழன் கரிகாலன் வீரத்தால் தமிழரசு, பேரரசு ஆயிற்று. இமயத்தின் உச்சிவரை பரவிற்று. எழுச்சித் தன்மையுடைய வீரம் கூடப் பல சமயங்களில் மண்ணாள்வோருக்கு வந்துவிடுவது உண்டு. ஆனால் கரிகாலன் குடிமக்கள் நலன் நாடும் பேரரசாகவும் விளங்கினான்! கல்லணைக்கட்டி நீர்ப்பாசன வசதிகளை முறைப்படுத்தினான்.

வாழ்க்கையில் தோல்விகளைத் தரக்கூடிய ஆற்றல் பகைக்கு இல்லை; இருக்க முடியாது. அசைவில்லாத-நடுக்கம் இல்லாத சோர்வில்லாத ஊக்கம் இருந்தால் வாழ்க்கையில் வெற்றிகளைக் குவிக்கலாம் என்பதை சிலப்பதிகாரத்தால் உணரலாம்!

.....................
“இருநில மருங்கில் பொருநரைப் பெறாஅச்
செருவெங் காதலின் திருமாவளவன்
.....................
அசைவில் ஊக்கத்து நசைபிறக் கொழியப்
பகைவிலக் கியது; இப் பயங்கெழு மலையென
இமையவர் உறையும் சிமையப் பிடர்த்தலைக்
கொடுவரி ஒற்றிக் கொள்கையிற் பெயர்வோற்கு”

(சிலப். 5 : 89-98)

என்னும் சிலப்பதிகார வரிகள் எண்ணத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/14&oldid=1371967" இலிருந்து மீள்விக்கப்பட்டது