பக்கம்:சிலம்புநெறி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலம்பு நெறி ☐ 13

அறிந்தவர் கடமை

வாய் படைத்தோரெல்லாம் பேசுகின்றனர். பொருள்களைச் சமைத்து, சுவைத்து உண்ணக் கற்றுக் கொண்ட சமுதாயம், உணர்வுகளைச் சமைத்துக் கொண்டு இனிய சொற்களைக் கூற, கற்றுக் கொண்டபாடில்லை.

பேசுவதெல்லாம் பேச்சா? சொல்லுவதெல்லாம் சொல்லா? “வறுமை என்றது செல்வத்தில் மட்டுமல்ல; சொற்களிலும் கூட உண்டு” என்பார் இளங்கோவடிகள். “வறுமொழியாளர்” என்று குறிப்பிடும் சிலம்பு.

வறுமை நிறைந்த சொற்களைப் பேசுபவர்கள் "வறுமொழியாளர்.” இதனையே திருக்குறள் பயனற்ற சொல் என்று கூறுகிறது. பயனற்ற சொற்களைக் கூறுபவர்களைப் ‘பதடி’ என்று வள்ளுவம் திட்டுகிறது.

சொற் குற்றத்தில் தீயது புறங்கூறல். அதாவது ஒருவரைப் பற்றி அவர் இல்லாத இடத்தில் கூறுதல். அதுமட்டுமா? கண் எதிரில் முகமன்; “புகழ்ச்சி புறத்தே பழிதுாற்றல்! இந்தக் குற்றம் மலிந்து வருகிறது. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்கிறவர்கள், அறத்திற்காக என்று கூறுவார்களாம். அங்ங்னம் கூறுவது பொய்! நம்பாதே!” என்று எச்சரிக்கை செய்கிறார் திருவள்ளுவர்.

அடுத்துவரும் சொற்குற்றம் மிகக் கொடிது! அதாவது கோள் சொல்லுதல். அம்மம்ம! காலத்திற்குரிய கடமைகள் இல்லாத சோம்பேறிகளின் தொழில், கோள் சொல்லுதல்; பகை வளர்த்தல். இன்று கோள் சொல்லிப் பிழைத்துத் திரிபவர்கள் எண்ணிக்கையும் மலிந்துவிட்டது.

அடுத்தது, சொற்குற்றம். தான் நினைப்பவையெல்லாம் நடந்தவை போலப் பேசுதல். இவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/15&oldid=1371887" இலிருந்து மீள்விக்கப்பட்டது