பக்கம்:சிலம்புநெறி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இவர்கள் பரப்பும் தீமை இருக்கிறதே அது , ஒருவரைத் தற்கொலை செய்து கொள்கிற அளவுக்குக் கொண்டு போய் விட்டுவிடும். “ஊரார் தத்தம் மனத்தன பேச எஞ்ஞான்று கொல் சாவதுவே” என்பது திருவாசகம். தத்தம் மனத்தன பேசுவோர் மிகவும் மோசமானவர்கள்.

சமுதாய உறவுகள் வளரவும், பாதுக்காக்கப் பெறவுமே நெறிமுறைகள். சாலை வழிச்சென்றால் ஊரையடையலாம் என்பதைப் போல உறவுகளுக்குரிய நெறிமுறைகளை அறிந்து உணர்ந்து ஒழுகினால் உறவுகள் வளரும்; பயன்தரும்; உறுதியானதாக அமையும்.

நெறிமுறைகள் பிறழப் பெறுவதால்தான் உறவுகள் நீடிப்பதில்லை; நிலைத்து நிற்பதில்லை; நண்பர்கள் பகைவர்களாகின்றனர்; உடன் பிறந்தவர்கள் கொலையாளிகள் ஆகின்றனர். இவையெல்லாம் இயற்கையல்ல; தவிர்க்க முடியாதனவுமல்ல.

எல்லாவற்றிற்கும் நெறிமுறைகள் உண்டு. நமக்கு எவையெல்லாம் நன்மையாக இருக்கின்றனவோ அவையெல்லாம் மற்றவர்களும் அடையவேண்டும் என்று எண்ணவேண்டும். உறவுகள் ஒத்துழைப்பும் உதவியும் கொடுத்துப் பெறுவனவே தவிர தாமாக வருவன அல்ல.

உலகின் எல்லாத் துறைகளிலும் ‘ஒரு தலைக்காமம்’ கொடிதே! மற்றவர்கள் மனம் வருந்த எதையும் கூறுதல், செய்தல் தீது; நெறியன்று, ஆயினும் உலகியலில் இந் நெறி நிற்போர் சிலரே.

ஆதலால், அறிந்தோரே சமுதாயப் பொறுப்புடையராக நடந்து கொள்ளுதல் வேண்டும். அறிந்தோராக இருப்பவர்களே சமுதாயத்தை அழைத்துச் செல்ல வேண்டியவர்கள். அவர்களிடம் சமுதாயம் கூடுதலாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/16&oldid=1371917" இலிருந்து மீள்விக்கப்பட்டது