பக்கம்:சிலம்புநெறி.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பு தெறி ☐ 17

மானதன்று. ஏன்? ஒரு நிகழ்வை அணுகும் முறையிலும் அளந்தறியும் வகையிலும் ஒரு மனிதர் தவறுதல் கூடும். அதனால், முன்னாளில் அரசர்கள், அமைச்சர்களுடன், ஐம்பெருங்குழுவுடன், எண்பேராயத்துடன் கலந்து பேசி முடிவெடுத்து, செயற்படுதல் என்ற முறை இருந்தது.

காலப்போக்கில் கலந்தறிதல் இயல்பு இல்லாமல் போயிற்று. ஒரேவழி யிருந்தாலும் கலந்தறியும் பணிக்குத் துணையாகாதவர்கள் சார்புகள் உடையவர்களானார்கள். அதனால் கலந்தறிதல் போதிய பயன்தரவில்லை.

அரசு முறையில் “ஒருமனிதமுறை” மேவியதால் மனிதகுலம் பயனடையவில்லை என்ற மனக்குறையில் பலர் கூடி ஆட்சி செய்யும் மக்களாட்சி முறையைக் கண்டனர். ஆயினும் இன்றுவரை செழிப்பான - முறையான மக்களாட்சியைக்கான இயலவில்லை. மக்களாட்சி வடிவமைப்பில் “தனி மனிதரே” ஆட்சி செய்யும் இயல்பு இன்றைய மக்களாட்சி முறையில் அமைந்திருக்கிறது. ஆட்சிமுறையில் தவறுகள் பெருகுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதே தவிர, குறைய வழி காணப் பெறவில்லை.

ஆட்சியைவிட, கட்சிகள் பெரிதாகி விட்டன. இன்று நாட்டில் வளர்க்கப் பெறுவது கட்சிப் பற்றே தவிர, நாட்டுப் பற்றல்ல! இவ்வாறு முறை பிறழ்ந்தபோதெல்லாம் அரசு நெறிமுறை திறம்பியுள்ளது. அரசு கெட்டுப்போய் வலிமை குன்றிப் பழிப்புக்கு ஆளாகி வரலாற்றுக்கு அடிமையாகி அழிந்திருக்கிறது. அரசியல் மரபில் வந்த அருளாளர் இளங்கோவடிகள். இந்நிலை கண்டு இரங்குகின்றார்.

ஆட்சி இயற்றும் அரசியல் தலைவன், அரசியல் முறை தெரிந்த, நல்லாட்சி தவிர வேறெதையும் நாடாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/19&oldid=1372300" இலிருந்து மீள்விக்கப்பட்டது