பக்கம்:சிலம்புநெறி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பு நெறி ☐ 19



 முல்லைம் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
 நல்லியல்பு இழந்து கடுங்குதுயர் உறுத்துப்
 பாலை என்பதோர் படிவம் கொள்ளும்.

(சிலம்பு 11:60-66)

என்பது சிலப்பதிகாரம்.

திருந்த மாட்டார்களா?

மக்கள், உருவத்தால் மக்கள் அல்லர். “உறுப்பொத்தல் மக்கள் ஒப்பன்று” என்று திருக்குறள் கூறும் ஏன்? “மக்களே போல்வர் கயவர்” என்றும் திருக்குறள் மக்கட் பண்பில்லாதாரை ஏசுகிறது. மக்கட் பண்பில்லாதவர்கள், சிந்திக்கும் பழக்கம் இல்லாதவர்கள்; சிந்திக்க மறுப்பவர்கள்; அறிவில்லாதவர்கள்.

ஆயினும் தங்களது அறியாமையையே அறிவு என்று நம்பி ஆட்டம் போடுபவர்கள். ஆணவத்தின் உருவங்களாகத் தலைதடுமாறி நடப்பவர்கள்.

இவர்களின் செவிகள் கேட்கும் திறன் உடையவையல்ல. இவர்களின் செவிகள் தோட்கப் படாத செவிகள்! இவர்கள் பிறப்பால் மக்கள்! அறிவால், உணர்வால், ஒழுக்கத்தால் விலங்குகள்! இத்தகு மக்களை இழிவு உபசார நிலையில் நெடிய ஒலியோடு ‘மாக்கள்‘’ என்று அழைத்தல் தமிழிலக்கிய மரபு.

மக்களாகப் பிறந்தோர், இயற்கை வழங்கிய அறிவு வாயில்களைப் பயன்படுத்தி, மக்களுக்குரிய தகுதியினைப் பெறுதல் வேண்டும். வாழ்க்கையின் இலட்சியமே மக்களை அறிவு நலமுடையராக்குதலும், பண்பு நல முடையோராக்குதலுமே. இவ்விரண்டு குறிக்கோளும் இன்று அடையத்தக்க வழியில், மக்களுடைய வாழ்க்கையின் நடைமுறை இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/21&oldid=1373575" இலிருந்து மீள்விக்கப்பட்டது