பக்கம்:சிலம்புநெறி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆதலால் “தெய்வமும் உண்டு கொல்” என்று கேட்கிறாள் கண்ணகி இன்றும் “தெய்வமும் உண்டு கொல்!” என்று கேட்கத்தான் செய்கின்றனர்! பலர். “தெய்வம் கோயிலில் இருக்கிறது.” என்று கூறு கின்றனர்! தெய்வத்தை ஒருமையில் காண்மின் ! வாழ்விக்கும் பேரறத்தில் காட்டுமின்! இதுவே கண்ணகியின் வினாவிற்கு விடை!

நன்றே செய்க! இன்றே செய்க!

உயிர் வாழ்க்கை என்பது, குறிக்கோளுடையது. உயிர் கண்டறிவதில்லை; ஆனால் கேட்டறியும், உயிரின் தரமும் தகுதியுமே உலகியலின் வரலாறாக வளர்கிறது.

உயிர், நல்லியல்புடையது. ஆனால், சார்பினால் உயிரின் நல்லியல்பு திரிகிறது. உயிர் தம்மியல்பில் திரியாமல் தம்நிலையில் நன்னிலையைப் பாதுகாக்க அறம் செய்து கொண்டிருக்க வேண்டும். அறம் என்பது மனத்துய்மை.

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
 ::ஆகுல நீர பிற”

என்று திருக்குறள் கூறும். .

நாளும் வாழும் வாழ்க்கையில் உயிர் மனத்துாய்மை இழத்தலும், இழுக்குறுதலும் தவிர்க்க முடியாதது. புவியீர்ப்பு ஆற்றல் தன்பால் பொருள்களை ஈர்ப்பது போல, உயிரை கீழ் நோக்கிய இயல்புகளில் இழுக்கும் ஆற்றல், பொருந்தா உலகியலுக்கும் உண்டு. அதனால் மனத்துய்மை கேடுறும் ஆதலால் நாள்தோறும் நாம் மனத்துய்மை பெறுதல் வாழ்தலுக்குரிய கடமை களுள் ஒன்று.

தூய்மை எளிதில் வராது. மனத்தூய்மை பெறுதற்குரிய வாயில்களை நாடி அவற்றைச் செய்தல் வேண்டும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/36&oldid=1384636" இலிருந்து மீள்விக்கப்பட்டது