பக்கம்:சிலம்புநெறி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ஊழ் என்பது என்ன?

இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்ற, வெளிப் படையான, காரணங்கள் மூன்றைக் குறிக்கின்றார்.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற் றாவது உம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்

ஊழ்வினை உருத்து ஊட்டும் என்பது உம்' காரணங்களாகும். இம்மூன்றனுள் வாழ்வியலுக்கு முதலாக அமைந்து மிகுந்த விவாதத்திற்கும் உரியதா கிறது ஊழ்.

ஊழ் என்பது என்ன? உயிர் நிலையானது; தோற்றம், அழிவு இல்லாதது. அறியத்தக்கது; செயல்கள் செய்யும் இயற்கையினது. உயிர், பிறத்தல் - இறத்தல் என்ற சொற்கள், உடல் மாற்றங்களைக் குறிக்குமே தவிர உயிரைக் குறிப்பனவாகா.

உயிர்க்கு, கண்ணால் காணப்பெறும் பருவுட லன்றி நுண்ணுடல் ஒன்று உண்டு. உடலியக்கத்தை இயக்குவிக் கும் மனம், புத்தி, சித்தம் ஆகிய அறிகருவிகள் நுண்ணுடலைச் சார்ந்தவை. உயிரின் மனம், புத்தி, சித்தங்களில் நிகழும் எண்ணங்கள், முடிவுகள், ஆர்வங் கள், உடலை இயக்கிச் செயற்படுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/40&oldid=702703" இலிருந்து மீள்விக்கப்பட்டது