பக்கம்:சிலம்புநெறி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அல்ல. ஊழின் ஒழுங்கமைவை எதிர்த்துப் போராடுவது. என்றால், நியதிகளை எதிர்த்து அல்ல.

நியதிகளும் ஒழுங்கமைவுகளும் இல்லாது போனால் வாழ்க்கையில், ஓர் அமைவு இருக்காது; அமைதி இருக்காது; நல்லன நோக்கி நல்லன நினைந்து செயற்படுதல் இல்லாமல் போகும்.

ஆதலால், ஊழியல் என்ற இந்த ஒழுங்கமைவு-நியதி எதிர்ப்பதற்குரியதன்று; வரவேற்கத்தக்கது. ஏன்? இயற்கையில், இப்படி ஒரு நியதி இல்லாது போனாலும் நாமாகவாவது படைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

இந்த ஊழியல் விதி நடைமுறையில் இருக்கும். பொழுதே மனிதகுலம் நன்னெறியில் ஈடுபட்டு நல்லன. செய்வதில் நாட்டம் காட்டுவது இல்லை. மக்கள் அன்றாடப் பிழைப்பாளர்களாக உள்ளொன்றும் புற மொன்றும் உடையவர்களாக வாழ்கின்றனர்.

நேற்றைய வாழ்வின் விளைவாக இன்றைய வாழ்க்கைக்கு வரும் ஊழின் பயனை எதிர்த்துப் போராடலாம் என்பது கொள்கை. -

ஏப்படி? நெடுந் தொலைவானாலும் வி ைர ந் து: செல்லும் ஊர்திகள் வழி, நெடுந்தொலைவுப் பயணம் எளிமையாக்கப் பெற்றுள்ளது; இன்புறுதலுக்குரியதாகவும் ஆக்கப் பெற்றுள்ளது. நோய், துன்பம் தருவதுதான்்! நோயின் கடுமையை மருந்துகள் மூலம் தணிப்பதுட னன்றி, தீர்வும் காணப் பெறுகிறது.

புயல், பெருவெள்ளம் போன்றவைகளைத் தடுத்து. நிறுத்தமுடியவில்லை; தடுத்து நிறுத்தவும் இயலாது. ஆயினும் அவை உருவாகி வரும் நிலைமைகளை அறிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/46&oldid=702709" இலிருந்து மீள்விக்கப்பட்டது