பக்கம்:சிலம்புநெறி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

உண்டு. இது ஊதிப்பழுக்க வைத்த பழம் போன்றது. பயன்படுதல் என்பது இயற்கையில் கனிந்த பழம். போன்றது.

நெறிவழிப்பட்ட முறையில் தனிமனித வாழ்வியலும். சமுதாய இயலும் அமைந்து இயங்கும்பொழுது பயன்கள் தாமே விளையும். ஆங்கு, தருவாரும் பெறுவாரும். இல்லை.

ஆதலால், நல்லோரைப் பயன்படுத்திக் கொள்ளல். பேறு. பயன்படுதல் நிலையில் ஊழின் త్రి 65 ఓ6. நல்லூழாக அமையும். அப் பயன்பாட்டுக்கு ஏற்ப, திரும் பப் பயன் பெற்று விட்டால் நல்லூழாக அமையாது.

ஊழையும் வெற்றி பெறலாம்!

ஊழின் பயனை எதிர்த்துப் போராடுதல் என்றால். என்ன? நல்லூழாயின் இன்புறு நலன்கள் எய்தும். வாழ்க்கை இன்பமாயினும், அதனை மருந்து எனக் கருதியே துய்த்தல் வேண்டும். உடற் பிணிக்குரிய மருந்தில் இனிப்பு, சுவை யுடையதாயினும் அளவுக்கு. மேல் தின்னல் தீது பயக்கும். -

ஆதலால், உலகில் யாரும் இனிப்பை அதிகமாகத் தின்றதும் இல்லை. அதுபோலத்தான்் இன்பங்களும் கூட. இன்பத்தில் அளவு கடந்த மகிழ்வெய்தி, பற்றுள்ளத். துடன் துய்த்தல் கூடாது. அங்ங்ணம் துய்த்தால் அது - அதாவது நல்லுழின் துய்ப்பு, தீயூழாக மாறி, பயன் விளைவித்தற்குரிய வாயில்கள் அமையும். அதோடு ஒன்றை இன்பமென மூழ்கி, மயங்கி, தருக்கித் துய்க்கும். காலை அத் துய்ப்பு முறை, மற்றவர்களிடத்தில், அழுக்காற்றையும் அவாக்களையும் தோற்றுவித்துப் பொருதலை உண்டாக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/48&oldid=702711" இலிருந்து மீள்விக்கப்பட்டது