பக்கம்:சிலம்புநெறி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 47 இன்பத் துய்ப்பை பற்றற்ற நிலையில் காய்தலும் களித்தலுமின்றி, கடமையுணர்வோடு துய்க்க வேண்டும். இங்ஙனம் துய்க்கும் பொழுது, அனுபவிக்கும் ஊழ், பின் தொடர்ச்சியின்றிக் கரைகிறது. எதிர் விளைவுகளை உண்டாக்காமலும், அமைகிறது. இது, நல்லூழை, வெற்றி கொள்ளும் முறை.

தீயூழ், துன்பத்தைத் தரும். துன்பம் கண்ட பொழுதும் கலக்கமுறாமல் அத்துன்பத்தை நடுக்கமற்ற நெஞ்சுடன் அனுபவிக்க வேண்டும். சாதலைவிட சாதலைப் பற்றிய எண்ணம் துன்பமானது; துன்பத்தை விளைவிப்பது. என்பது ஒரு கருத்து. ஆதலால் துன்பத்தை, கவலை யாக்காமல் அழிவுக்குரிய வாயிலாக ஆக்கிக் கொள்ளாமல் தற்காத்துக் கொள்ள வேண்டுமானால், துன்பத்தை அறைகூவல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

துன்பத்தை அனுபவிக்க மனம் எடுத்துக் கொள்ளும் நிலையில் துன்பத்தின் வேகம் தவிர்க்கப்படுகிறது. அதுமட்டுமல்ல. துன்பத்தை அனுபவிக்கும் உணர்வு நிலையில் துன்பத்தின் வேகம் தணிகிறது; விவேகம் பிறக்கிறது. அதனால் தீயூழும் வெற்றிகளாக்கப் படுகிறது.

ஆதலால் தீயூழை, தீயூழ் துன்பம் தருவதற்குரிய வாயில்களைப் பகுத்தறிவுடன் ஆராய்ந்து செயல்களை மேற்கொண்டு தீ பூழையும் நாம் வெற்றிபெற வேண்டும். இதுவே வாழ்க்கையின் நியதி. - -

குறிக்கோளை உண்டாக்கிக் கொண்டு அக்குறிக் கோளை அடைவதே, வாழ்க்கையின் இலட்சியம். குறிக் கோள் என்று எடுத்துக் கொண்டால் ஆர்வம் நிறைந்த ஆவேசமான முயற்சிகள் தோன்றும். இம்முயற்சிகளுக்கு மலையை நகர்த்தும் பேராற்றல் உண்டு. அதனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/49&oldid=702712" இலிருந்து மீள்விக்கப்பட்டது