பக்கம்:சிலம்புநெறி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை

தமிழிற்கும் தமிழ்ப் பண்பாட்டி ற்கும் புகழ் கூட்டும் தமிழிலக்கிய ங்களில் சிலப்பதிகாரம் தனிச்சிறப்புடையது. அச்சிறப்பு வாழ்வியல் வரலாற்று நிகழ்ச்சிகளை யெல்லாம் ஒருங்கே சாறு திரட்டி பழரசமாக தவத்திரு. குன்றக்குடி அடிகளார். அவர்கள், சிலம்பு நெறி' என்னும் சிறநத தலைப்பில் தலைசிறந்த நூலாக அருளியிருக்கிறார்கள்

மாபெரும் காப்பிய நூலான சிலப்பதிகாரத்திலுள்ள வாழ்க்கை நெறி கவி அரங்கங்களிலும், இலக்கிய மேடை களிலும் செவிநுகர் கனியாகத் திகழ்கிறது.

அரிய, பெரிய தத்துவங்களை மிக எளிமையாகவும், தெளிவாகவும் அழகுடன் சிலம்பு நெறி' என்னும் இந்நூல் வாயிலாக அளித்தருளும் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களுக்கு, மக்கட் சமுதாயம் மிகவும் கடமைப்பட்டிருக்கின்றது.

'சிலம்பு நெறி' என்னும் இந்நூலினை, நம் வாழ்க் கைக்கு ஒளியூட்டும் அறிவு விருந்தாக அளித்தருளும் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்களின் பொன்னார் திருவடிகளை வணங்கி மகிழ் கிறேன்.

பல்வேறு பணிகளுக்கிடையே அ ணரி யெ ன அணிந்துரை அளித்து மகிழும் மாண்புமிகு. நீதியரசர் பி. வேணுகோபால் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி. . இடையறாப் பணிகளினூடே நூலாக்க உதவி மகிழும் உழுவலன்பு நண்பர், ஆதீனக் கவிஞர், மரு. பரமகுரு அவர்களுக்கு உளம் கனிந்த நன்றி. -

இச்சிறந்த வாழ்வியல் காப்பிய நூலை அனைவரும் படித்துப் பயன் பெற்றிட கலைவாணி'யின் திரு அருளை வேண்டுகிறேன்.

சென்னை-17 தங்களன்புள்ள, - > 25-9-93 "கலைவாணி" சீனி திருநாவுக்கரசு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/5&oldid=702666" இலிருந்து மீள்விக்கப்பட்டது