பக்கம்:சிலம்புநெறி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஊழின் விளைவு வரத்தான்் செய்யும். இது தவிர்க்க முடியாத நியதி.

ஆனாலும் ஊழின் விளைவை ஊழின் தாக்குதலை தம்முடைய முயற்சிகள் வழி, தணிக்கலாம். மிகப் பெரிய பாதிப்புக்கள் ஏற்படாதபடி பாதுகாக்க முடியும். கொடிய கோடையின் வெப்பத்தை ஒரு சாதாரண, குடை தடுக்க வில்லையா? சுடு மணலை, காலில் அணிந்து கொள்ளும் செருப்பு, தடுத்துப் பாதுகாக்க வில்லையா? -

இலட்சிய வேகத்தில் இடையில் சந்திக்கும் தடைகள் துாள் தூளாவதில்லையா? அதுபோலத்தான்் இதுவும். ஆதலால், ஊழ் உண்டு. அது மற்றவர் படைப்பு அல்ல. அவரவர்களுடைய சொந்தப் படைப்பே. . .

ஒருவர் செய்த செயல்களின் விளைவே ஊழ், அவரவர் விளைவுகளின் பயனை அவரவர் அனுபவிக்க வேண்டுமென்பது ஒரு நியதி, ஒரு ஒழுங்கு அதாவது உலகில் உயிரியலில் உள்ள ஓர் ஒழுங்கு: முறைபிறழா 9spáf “Order and constancy” es sus sm Gsu. “esorsui வினை வழி அவரவர் வந்தனர்' என்பது ஞான அனுபூதி வாக்கு.

வாழ்க்கை என்ற களத்தில் குதிக்கும் பொழுதே சென்ற கால வாழ்க்கையின் பயன் சுமை இருக்கத்தான்் செய்கிறது. அதே போழ்து சிந்திக்கும் திறனும் அறிவும் உயிர்க்கு இயல்பாக அமைந்திருக்கிறது. இப் புத்தியால் சாக்கைத் தூக்கினாலும், தண்ணீரில் நனைத்துத் துக்காமல் எளிதில் தூக்குவது போல் உயிர்கள் பயனைத் துய்க்கலாம்.

ஆதலால் ஊழால் அதனுடைய விளைவால் எதிர் விளைவால் பாதிப்புக்கு ஆளாகாமல் தற்காத்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/50&oldid=702713" இலிருந்து மீள்விக்கப்பட்டது