பக்கம்:சிலம்புநெறி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

S - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஆசைப்பட்ட ஒன்றை அடையாத வழி உயிர்ப்படும் அல்லல் எழுதிக் காட்ட இயலாதது. உடலுணர்ச்சி களைத் தூண்டிவிடும் போதைப் பொருள்களின் வழிப் பட்டோர் படும் அவதிகளைக் காண்கிறோமே! ஆதலால், எப் பற்றும் தீயதேயாம். ஓர் ஊரில் வாழ்பவர்கள் அந்த ஊரின் மீது பற்றுக் கொண்டு அந்த ஊரை வளர்த்துப் பாதுகாத்தல் கடமையன்றோ! இக் கடமையை எப்படிப் புறக்கணிக்க முடியும்.

இக் கடமையை, புறக்கணித்தால் ஊர்கள் வாழும் இயல்பினை இழந்து பாலைவனங்களாகி விடாதா? ஆம்! நூற்றுக்கு நூறு உண்மை! பற்று என்பது உறவுகளைத் தவிர்ப்பது; கடமைகளைத், தவிர்ப்பது; எதுவுமே இல்லாமல் சூன்யமாக்குவது என்பதல்ல.

கடமைகளின் தொகுதியே வாழ்க்கை. அன்பு, ஆசைகளின் வெளிப்பாடே வாழ்க்கை. பற்று என்பது, 'மற்றவர்க்குக் கூடாது; வேறு யாருக்கும் இல்லை. எனக்கே உரியது' என்ற அடிப்படையில் முகிழ்ப்பது. அதுமட்டுமல்ல. பற்றுக் காட்டப் பெறும் பொருள் கூட அதற்கு முக்கியமல்ல. அதில் உள்ள துய்ப்பு உரிமங் களை முதன்மைப் படுத்துதல் பற்று.

ஊழின் இயல்பு

பற்றுக்கள்-ஆசைகள் ஊழின் வினைபுலன்களாகும். பற்றுக்களை விடுதலே ஊழை வெற்றி பெறும் வழி. யாகும். பற்றை விடுதல் என்பது நுட்பமான தத்துவம், செல்வத்தை விரும்புதல், ஈட்டுதல், தொகுத்தல், துய்த்தல் ஆகியன பற்று ஆகா.

ஆனால் செல்வத்தை ஈட்டும்பொழுது மற்றவர்

களுக்குத் துன்பம் தந்து ஈட்டுதல் பற்று ஆகும். செல்வத்தின் பயன்களாகிய ஈதல், துய்த்தல் ஆகியன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/52&oldid=702715" இலிருந்து மீள்விக்கப்பட்டது