பக்கம்:சிலம்புநெறி.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 153

ஆதலால், சாதல் பழக்கப்பட்டுப் போன ஒன்று; கவலைப்படுவதற்கில்லை. ஆதலால், இன்பமென்று: மகிழ்வுக் கூத்தடித்தற்கில்லை. இன்னாதன என்று. கருதிப்புலம்புவதற்கும் ஒன்றும் இல்லை.

ஆற்றுவெள்ளம் ஓடும் திசையில் படகு செல்லுதல் போல, உயிர்கள், ஊழின் நெறியில் செல்லும் தகையன என்பது கொள்கை. இக்கொள்கையை அப்படியே ஏற்பதற்கில்லை. ஏற்கவும் இயலாது. ஏன்? -

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை மனித உலகத். திற்குத் தேவையான மூன்று உயர்க்குறிக்கோள்களை உ ன ர் த் து ம் நோக்கத்துடன் இயற்றியுள்ளார். அம் மூன்று நோக்கங்கள்.

'அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற் றாவது உம்

உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்என் பது உம்.'

என்பனவாகும்.

இவ் வுயிர்க் குறிக்கோள்கள் வாழும் மனிதக் குலத். திற்கு இன்றியமையாதன. மனிதகுலம் வாழும் நாடு, நல்ல் வண்ணம் அமையவேண்டும். அதாவது நல்ல அரசியல் வேண்டும். நல்ல வலிமை சான்ற அறநெறிச் சார்புடைய முறை வழங்கக் கூடிய சிறந்த அரசு அமை யாத நாட்டில் இனிய வாழ்க்கை அமையாது; அமைதி கிடைக்காது. ஆதலால், வாழ்க்கைக்கு மிகுதியும் உறு: துணையாக இருக்கக்கூடிய நல்ல அரசை முதற். குறிக்கோளாகக் கொண்டார்.

நாடு எவ்வளவு சிறப்பற்றிருந்தாலும் வீடு சிறப்பாக அமையாது போனால் மானிட வாழ்க்கை சிறப்பெய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/55&oldid=702718" இலிருந்து மீள்விக்கப்பட்டது