பக்கம்:சிலம்புநெறி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி ( 59

கோவலன், ஊழினை அடக்குதற்குரிய வலிமை வின்றி, பழக்கவழக்கங்களால் நொய்மைப் பட்டிருந்த தால், மாதவியின் பாடல், அவனை எளிதில் தாக்கியது; பாதிப்புக்குள்ளாக்கியது; ஊழின் வழி அவன் உந்திச் செலுத்தப்பட்டான். ஊழின் ஆற்றலைத் தடுத்து நிறுத்தும் தறுகண் அவனிடத்தில் அப்போது இல்லை.

மாதவியின் கற்பனையில் ஐயம் கொள்கிறான். இந்த ஐயத்திற்குரிய பழைய ஊழ், கோவலனுக்கு உண்டு. ஓர் அரங்கில் மாதவி ஆடுகிறாள். பலர் அவளுடைய ஆடல் திறனைக் கண்டு மகிழ்கின்றனர்.

ஆனால் கோவலன் மட்டும் கலையை மறந்தான்். மற்றவர்கள் மகிழ்வது பற்றியும் அவன் அழுக்காறு கொண்டான்; மாதவியின்பால் ஐயம் கொண்டான். இந்த ஐயம் முற்றி, கானல் வரியில் வெளிப்படுகிறது.

கோவலன் தனிமகனாக வாழும் பொழுது நல்லூழை வளர்த்துக் கொண்டானில்லை. மாதவியுடன் கூடி -வாழும் சொற்காலத்திலும்கூட அவன் நல்லூழைத் தேடி வளர்த்துக் கொண்டானில்லை. தான்் வளர்த்துக் கொண்ட ஊழைச் சிந்தித்து மறு ஆய்வு செய்து மாற்றிக் கொள்ளும் பழக்கங்களும் உடையவனாக இல்லை,

ஆதலால், ஊழின் வழியே செல்கிறான்.

கோவலன் மாதவியிடத்தில் விடுதல் அறியா விருப்பினனாகத் தங்கினான். அந்த விருப்பத்தையும்கூட ஊழ் வெற்றி கொண்டுவிட்டது. இந்த இடத்தில் கோவலன் வீழ்ச்சியைத் தடுக்கக் கூடிய நல்லியல்புகள் கோவலனிடத்தில் இல்லாமற் போனதே குறை.

ஒருவர், வாழ்க்கை தோல்வியைச் சந்திக்காமலிருக்க வேண்டுமானால். அவர், நாள்தோறும் சிந்தித்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/61&oldid=702724" இலிருந்து மீள்விக்கப்பட்டது