பக்கம்:சிலம்புநெறி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தம்முடைய தீய பழக்கங்களை, தவிர்த்துக் கொள்பவ. ராகவும் நல்ல பழக்கங்களை, வளர்த்துக் கொள்பவ: ராகவும் இருக்க வேண்டும்.

நிகழ்ச்சிப் போக்கின் வழியில் செல்லாமல் நினைந்து செயல்படுபவராக இருக்க வேண்டும். நிகழ்வுகளும் சூழ் நிலைகளும் அவரைப் பாதிக்கக் கூடாது. இவைகள் எப்படியிருப்பினும் இவைகளுக்கு அப்பாலும் நின்று. சிந்தித்துச் செயல்படுவோராக அவர் வாழ்ந்தால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும். இத்தகையோர் வாழ்க்கையில், ஊழ் தோற்கும். அவர்கள் வெல்வர்.

இத்தகைய ஆற்றலும் நல்லியல்பும் கோவலனுக்கு இல்லை. அவன் உணர்ச்சி வசப்பட்டவன். நிகழ்வுகளின் வழி உணர்ச்சிகளால் உந்தப் பட்டு அரிய காரியங்களைக் கூட செய்திருக்கிறான். ஆயினும், அந்த உணர்ச்சி அவனிடம் நிலையாக இருந்ததில்லை. -

எடுத்துக்காட்டு, ஒன்று; கோவலன், கணவனைப் பிரிந்து வாழ்ந்த ஒரு பெண்ணுக்குப் பொருள் கொடுத்து, கணவனைச் சேர்ந்து அவள் வாழுமாறு, வழி நடத்தி னான். கணவனைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணின் துயரம், அவனுக்கு, தெரியத்தான்் செய்தது.

ஆனால் அதே கோவலனுக்கு, தன்னைப் பிரிந்து. வருந்தும் கண்ணகியின் துயரம் தெரியாதது ஏன்? இது: தான்் அவன் நிலைத்த உணர்ச்சி இல்லாதவன் என்பதற்கு எடுத்துக் காட்டு. கோவலனிடம் அருமை யாகத் தென்பட்ட சிறந்த பண்பாடுகள் நிலைத் திருந். தால், அவன், சான்றோனாகியிருப்பான்.

ஆதலால், மாதவியின் கானல் வரிப்பாடல்: கோவலனை முறை பிறழ உணரச் செய்தது. மாதவியோ பெண். மேவிச் செல்லும் இயல்பைப் பெறாதவள். முடிவு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/62&oldid=702725" இலிருந்து மீள்விக்கப்பட்டது