பக்கம்:சிலம்புநெறி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி (-) 61

கோவலன் பிரிந்து விடுகிறான். கோவலன் மாதவியை விட்டுப் பிரியும் இடத்தில் இளங்கோவடிகள் ஊழைக்

காரணம் காட்டுகிறார்.

ஆம்! கண்ணுக்குப் புலனாகக் கூடிய எந்தக் காரணமும், மாதவியை, கோவலன் பிரியக் காரணமாக இல்லை, செவிக்குப் புலனாகும் காரணமும் இல்லை. கோவலனும் மாதவியும் தேர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர் கள்; விடுதலறியா விருப்புடன் வாழ்ந்தவர்கள்; ஒருநாள் அல்ல. பல நாட்கள் வாழ்ந்தவர்கள்.

திடீரென ஒரு நிகழ்ச்சி. அதுவும் நன்னிகழ்ச்சி, நற் கற்பனை, சிறந்த உருவகம். இவற்றை முறை பிறழ உணர்ந்து, கோவலன் பிரிகிறான் என்றால், ஊழைத் தவிர, வேறு என்ன காரணம் காட்ட முடியும்? அதுவும் இளங்கோவடிகளுக்கு, கோவலன் மாதவியை விட்டுப் பிரிவதில் உடன் பாடில்லை. எங்கெங்கோ சுற்றித் திரிந்த கோவலனை மாதவி ஒருமைப் படுத்தி வைத்திருந்தாள். -

- திடீரென அந்த முயற்சிகள் தகர்க்கப் பட்டவுடன், இளங்கோவடிகள் காரணங்களைத் தேடிப்பார்க்கிறார். யாதும் அவருக்குத் தெரியவில்லை. உடனே ஊழின் மீது வைத்துப் பாடுகிறார், யாழிசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின்” என்று இங்கு ஊழ் என்று வலியுறுத்தப்படுவதை, இந்தப் பிறப்பிலேயே உள்ள சென்ற காலப் பழக்க வழக்கங்கள் என்பதை உய்த்து உணர்ந்தால் பழக்கங்கள் தவிரப் பழகும் இயல்பி ருந்தால், ஊழை வெற்றி காணலாம் என்ற உண்மை புலப்படும். .

கோவலன், ஊழின் வலியால் உந்திச் செலுத்தப்

படுவதாக இளங்கோவடிகள் கூறும் இரண்டாவது இடம் கனாத் திறம் உரைத்த காதை. கோவலன், மாதவியை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/63&oldid=702726" இலிருந்து மீள்விக்கப்பட்டது