பக்கம்:சிலம்புநெறி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

பிரிந்தவுடன் மாலைப் பொழுதில் கண்ணகியைக் காண வருகிறான். கண்ணகியைக் காணும் தருணத்தில் கோவலன் தன்னுடைய சென்ற கால நடத்தைகளை எண்ணி வருந்தி அதனால், தன்னை வறுமை வந்த, டைந்தது என்று நாணுகிறான். இதனைக் கோவலன்,

'சலம்புணர் கொள்கை சலதியொ டாடிக்

குலந்தரு வான்பொருட் குன்றக் தொலைந்த இலம்பாடு காணுத் தருமெனக்கு’’ > (சிலம்-கனா 69-71) என்று கூறுவதனால் அறியலாம். கோவலன் சொன்னதை ஆராய்ந்தால் இரண்டு செய்திகள் ஆய்வுக்கு உரியனவாம். .

ஒன்று, குலம் தரு வான் பொருள். அதாவது பரம்பரைச் சொத்து. கோவலன் தோன்றி, அரிய முயற்சிகளில் ஈடுபட்டு உழைத்துப் பொருள்களை' ஈட்டியிருப்பானாகில், அவன் அந்தச் செல்வத்தின் அருமையை அறிந்து செலவழித்திருப்பான். அந்தவாய்ப்பு அவனுக்கில்லை. .

உழைப்பையும், முயற்சியையும் சுவைத்து வாழும் தகுதி மிகுதியுமுடைய, ஒழுக்க நெறி வாழ்க்கை, கோவலனுக்கு இல்லாமற் போய்விட்டது. அதனால் அவனுக்குச் செலவழிக்கத் தெரிந்ததே தவிர, ஈட்ட வேண்டும் என்ற உணர்வில்லை. கோவலனின் செல்வம் செலவழித்ததால் மட்டுமே அழிந்தது என்று கருத. முடியாது. செல்வம் நுகர்தல் வழி, செலவழித்தலுக்குரியது. தான்ே! அதனால் செல்வம் அழியும் என்று கூறுதல் பொருளியல் கொள்கையன்று. செல்வம் தொடர்ந்து, ஈட்டப்படாது போனால்தான்் அழியும்.

கோவலனின் செல்வம், செலவின் வாயில்களை, பெற்றிருந்ததைப் போல, வருவாய் வாயில்களைப் பெற.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/64&oldid=702727" இலிருந்து மீள்விக்கப்பட்டது