பக்கம்:சிலம்புநெறி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 தவத்திரு குன்றக்குடி ஆடிகளார்

கோவலன் காலத்தில் வாழ்ந்த சமுதாய மனப் போக்குகள், கோவலன் வீழ்ச்சியை விரைவு படுத்துவன வாகவே அமைந்திருந்தன. அதாவது Garఎకు வீழ்ச்சியை, தடுத்து நிறுத்தக்கூடிய ஆற்றல், சமுதாயத் தினிடத்திலும் இல்லை. கோவலன் நெறி முறைப் பிறழ்விற்கு, சமுதாயத்தின் நடைமுறையே துணையாக வும் அமைந்தது.

கோவலன் வறுமையுற்று, துன்பப்படும் காலத்து அன்றிருந்த சமுதாயம் அவனைத் தேற்றும் குறிப் புடையதல்ல. இழித்துப் பழித்துக் கூறுவதோடு மட்டுமின்றி, அயலான் போலக் கருதும் மனப்போக்கும் சமுதாயத்தினிடத்தில் இருந்தது. ஆக, இத்தகு தீய சமுதாய ஊழ் கோவலனைப் புகாரில் வாழ அனுமதிக்க வில்லை. -

ஆதலால், கோவலன் இழந்த பொருளை ஈட்டும் ஆவல், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளும் விருப்பம் ஆகி, பல்லாண்டு பழக்கப்பட்ட உணர்வுகள் துண்ட, மதுரைக்குச் செல்ல நினைக்கின்றான். -

மதுரை, அயல்நாட்டு நகரம். அவனை அறியாதவர் பலர் அங்குண்டு. அவனுடைய சென்ற கால வாழ்க்கை யையும், நிகழ்காலத் தாழ்ச்சியையும் எடுத்துக் கூறித் துற்றுபவர்கள் யாரும், அங்கு இருக்க மாட்டார்கள். நேற்று மதித்தவர்கள் இன்று செல்வமின்மையின் காரணமாக, அலட்சியப்படுத்தும் கொடிய துன்பம் அங்கு இருக்காது. -

இருந்த செல்வத்தை, உடனிருந்து அனுபவித்தவர் கள், தொடர்ந்து வர மாட்டார்கள். அதனால் சிக்கனமாக வாழ முடியும். புகாரை விட்டு மதுரைக்குச் சென்று விட்டால், மாதவியைக் கூட, அவனால் முயன்று மறந்து விட முடியும். இத்தகைய எண்ண அலைகளால், கோவலன் உந்தப்பட்டிருக்கக் கூடும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/66&oldid=702729" இலிருந்து மீள்விக்கப்பட்டது