பக்கம்:சிலம்புநெறி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5

சிலப்பதிகாரம் வலியுறுத்தும் இரண்டாவது நெறி 'உரைசால் பத்தினியை உயர்ந்தோர் போற்ற வேண்டும் நாடு சிறப்புற நல்ல அரசு தேவை. வீடு சிறப்புற நல்ல மனைவி தேவை. நாட்டிற்கு வலிமை சேர்ப்பதே நல்ல மனைவி தான்ே. நாட்டிற்கும் வீட்டிற்கும் விழுப்பம் சேர்க்கும் கற்புடைய மனைவியை, பத்தினி பெண்டிரை உயர்ந்தோர் போற்ற வேண்டும். இது இரண்டாவது சிலம்பு நெறி.

தூய அன்பு, கணவனுக்கு தியாகம் செய்தல், வாழ்க்கையின் அனைத்துத் துறையிலும் கணவனுக்கு தோழமையாதல், துணை நிற்றல் இவை அனைத்தும் சேர்ந்த ஒழுக்க நெறியே கற்பு என்று அருமையாக விளக்கம் தருகிறார்.

அடிகளார் காவி உடை அணிந்த துறவிதான்். மனித இயல்புகளை புரிந்துகொண்டு கற்புக்கு என்ன அற்புத மான இலக்கணம் வகுக்கிறார் என்பதைக் காண தமிழ் உள்ளங்கள் பூரிக்கும். மகிழ்ச்சி அடையும்.

சிலப்பதிகாரம் வலியுறுத்தும் மூன்றாவது நெறி "ஊழ்வினை_உருத்து ஊட்டும்”. ஊழ் வலிமை அதன் பயனை தந்தே தீரும். ஊழ் ள்ன்றால் என்ன? தவத்திரு அடிகளாரின் கருத்துக்களின் நுட்பம், பொலிவு, புதுமை இவை அனைத்தும் இங்கே பார்க்கலாம்.

புலன்கள், பொறிகளின் வாயிலாக செயற்பாட்டுக்கும்

பயனுக்கும் வருவது ஊழ். இது தவிர்க்க முடியாத இயற்கை விதி, நியதி, அறத்தின் செயற்பாடு.

நேற்றைய வாழ்வின் காரணமாக இன்றைய வாழ்க்கைக்கு நமக்கு ஏற்படும் விளைவுகள். இதுதான்் ஊழ். நாம் செய்த வினைகளால் ஏற்படும் விழைவுகளை நாம் அனுபவிக்கத்தான்ே வேண்டும். இதுதான்் ஊழ் என்று விளக்கும் அடிகளார். இதனை மனிதன் எதிர்த்து போராடலாம். வெற்றியும் அடையலாம் என்று நம்பிக்கை ஊட்டுகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/7&oldid=702668" இலிருந்து மீள்விக்கப்பட்டது