பக்கம்:சிலம்புநெறி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஊடல் வேறு தோன்றிவிட்டது. பாண்டியன், அரசப் பெருங் குடும்பத்தைச் சேர்ந்தவனானாலும் ஒழுக்க நெறியில் சிறந்திருந்தவன். காதல் மனைவியின் ஊடலைப் பொறாதவனாக ஊடல் தீர்க்கும் வேட்கை யினால், கோப்பெருந்தேவியிடம், விரைந்து, செல்கிறான்.

தவறு செய்யாத தன்னைத் தவறாக நினைத்துக்

கொண்டு அரசி ஊடியிருக்கிறாளே என்ற கவலை

அவனை, வருத்தியிருக்கிறது. அதனால் ஊடல் தீர்க்கும் வேட்கை அவனுக்கு மிகுந்திருக்கிறது.

நற்பழக்கங்களால் செழித்த அவனுடைய நல்லூழ் , எதிர்பாராத தீமைக் குறுக்கீடுகளால், அலைப்புறுகிறது: அதனால் உறுதி பிறழ்கிறது.

இத்தருணத்தில், பொற்கொல்லன் அந்தப்புர வாயிற் படியில் அரசனைச் சந்திக்கிறான். காணாமற். போன அரசியின் சிலம்பை, கண்டுபிடித்து விட்டதாகச் சொல்கிறான். -

காணாமற்போன சிலம்பு கைவசம் வந்தால், அரசியின் ஊடலைத் தீர்ப்பது எளிது என்று அரசன். கருதுகிறான். அதனால், s

"தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகிற் கொன்று, அச்சிலம்பு கொணர்க ஈங்கு”

என்று ஆணையிடுகிறான். தவறு செய்யாத நிலையில் அரசி தவறெனக் கொண்டமையாலும், காதல் மிகுதி யினாலும், நிலைமாறி அரசனின் வாய் உமிழ்நீர் வற்றி, "கொன்று அச்சிலம்பு கொணர்க' என்று கூறி சொற்சோர்வுபட்டு விட்டான். சொற்சோர்வு, பொருட் சோர்வாக மாறி, கோவலன் கொலைக்குக் காரணமா -யிற்று. பாண்டியன் செங்கோல் வளைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/72&oldid=702735" இலிருந்து மீள்விக்கப்பட்டது