பக்கம்:சிலம்புநெறி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 71

பாண்டியனின் செங்கோலை வளைத்த வினையை "வல்வினை’ என்று இளங்கோவடிகள் கூறுகிறார் ஏன்? பாண்டியன். சிறந்த அரசன்; நெறிமுறை பிறழாதவன். அவனுடைய, செங்கோலையே வளைத்த வினையாதலால் வல்வினை' என்றார்.

காலந்தாழ்த்தியேயானாலும் பாண்டியன் நெடுஞ் செழியன் தன்னிலை எய்தினன். அயரா ஆள்வினை யோடு, நீதியில் தோய்ந்த நெஞ்சத்தோடு, தனது செங்கோலை வளைய விடாமல், உயிரையே ஆணியாகக் கொடுத்து, செங்கோலை நிமிர்த்தி, உலகத்திற்கே காட்டினான்.

நெடுஞ்செழியன் செங்கோலை வல்வினை வளைத்தவேகத்தைவிட, பாண்டியன் நெடுஞ்செழியனின் ஆள்வினை அதனை நிமிர்த்ததே, அதுதான்், காப்பி யத்தில் இறவாப் புகழ்பெற்றுள்ளது. ஊழ்வினையை, ஆள்வினையால் மாற்றலாம். மாற்றமுடியும் என்பதற்கு பாண்டியன் நெடுஞ்செழியனே சான்றாவான்.

'வல்வினை வளைத்த கோலை மன்னவன்

செல்லுயிர் கிமிர்த்துச் செங்கோ லாக்கியது' .

. (காட்சிக் காதை - 98-99

என்பது, எண்ணத்தக்கது.

ロ口口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/73&oldid=702736" இலிருந்து மீள்விக்கப்பட்டது