பக்கம்:சிலம்புநெறி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

ஒன்றாகிவிடுதல். இந்த இலக்கணங்கள் கண்ணகி யிடத்தில் பொருந்தியிருந்த நிலையினைக் காண்போம். கண்ணகி, கோவலனாகிய தலைமகனுக்கு முற்றும் ஈடு கொடுக்கும் தலைமகளே யாவாள். கோவலனின், உயிரும், உணர்வும் மகிழ்ந்து இன்புறத்தக்க அளவிற்கு அவள் இன்பப் பெட்டகமாக இருந்தாள் என்பதை இளங்கோவடிகள், கோவலன் வாயிலாக,

"மாசறு பொன்னே வலம்புரி முத்தே! காசறு விரையே கரும்பே! தேனே! அரும்பெறற் பாவாய்! ஆருயிர் மருந்தே! பெருங்குடி வாணிகன் பெருமட மகளே! மலையிடைப் பிறவா மணியே என்கோ அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ! யாழிடைப் பிறவா இசையே என்கோ! தாழிருங் கூந்தல் தையாள்! நின்னை...'

(மனையறம். 73-80)

என்று, பாராட்டி மகிழ்கிறார்! இதிலிருந்தே கண்ணகியின் சிறப்பை உணரமுடிகிறது.

அப்படியானால், ஏன் கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்தான்்? என்ற வினாத் தோன்றும். பலர் அவரவர், சிந்தனைப் போக்கிற்குத் தகுந்தவாறு விடை சொல்கின்றனர். -

கண்ணகியிடம் மாதவிக்கிருந்த கவர்ச்சியில்லை; கோவலன் கலைஞன், கண்ணகியிடம் கலையுணர்வு இல்லை; கலை இல்லை’ என்றெல்லாம் சொல் கின்றனர். இவையனைத்தும் பொய். கோவலன் இயல் பிலேயே மகளிர் ஒழுக்கத்தில் முறை பிறழ்ந்தவன். அவனுடைய மகளிர் ஒழுக்கம் பற்றி இளங்கோவடிகள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/76&oldid=702739" இலிருந்து மீள்விக்கப்பட்டது