பக்கம்:சிலம்புநெறி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

கோவலன் பினத்தை கொலையுண்ட இடத்தில் கண்ட கண்ணகி நீதி கேட்க பாண்டியனின் அவைக் களத்தை நோக்கி நடக்கிறாள். அப்பொழுது கண்ணகி "பெண்டிரும் உண்டு கொல்”, சான்றோரும் உண்டு கொல் தெய்வமும் உண்டு கொல்” என்று கூறி நீதி கேட்கிறாள். 'தெய்வமும் உண்டு கொல்” என்ற கண்ணகியின் கூற்றுக்கு தவத்திரு அடிகளாரின் விளக்கம், எங்களைப் போன்றவர்களின் மனதைத்

தொடும் பகுதி.

தெய்வம் உண்டுகொல்” என்ற கண்ணகியின் கூற்றில் "தெய்வம்' என்பதற்கு என்ன பொருள் என்பதை மிக துட்பமாக விளக்குகிறார் அடிகளார். தெய்வம் என்பது நியதிகளின் மறுபெயர். நீதியின் வடிவம் தெய்வம்.

எங்கு நீதி போற்றப்படுகிறதோ அந்த நாட்டில் மனித உரிமைகள் மதிக்கப்பெறும். இயற்கை நியதிகள் பாராட்டப் பெறும். வல்லாண்மை வாழும். தெய்வத்தை "நீதி' என்று திருவாசகம் போற்றுகிறது என்று அடிகளார் முடிக்கிறார். இந்த நூலில் என் உள்ளத்தை யும் உணர்வுகளையும் தீண்டிய பகுதி இதுதான்்.

பல முறை படித்து மகிழ்ந்தேன். வாசகர்கள் இந் நூலின் எல்லாபகுதிகளையும் படித்து மகிழ்ந்து இன்புற வேண்டும். இதுவே என் அவாவும் வேண்டுகோளும் ஆகும். -

தவத்திரு அடிகளார் அவர்களின் நூல்களை தொடர்ந்து வெளியிட்டுவரும் திரு சீனி. திருநாவுக்கரசு அவர்கள் இதனையும் சிறப்பாக வெளியிட்டுள்ளார்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்.

சென்னை • , தங்கள் 25-9-93 பி. வேணுகோபால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/8&oldid=702669" இலிருந்து மீள்விக்கப்பட்டது