பக்கம்:சிலம்புநெறி.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 89

கொல்லப்பட்டான் என்ற செய்தி அவளை அனலாக்கி விட்டது. அவளுக்குத் தன் கணவன் கள்வன் அல்லன் என்னும் தெளிவிருக்கிறது.

அது மட்டுமா? தனது காற்சிலம்பை விலை கொடுக்காமல் அடைவதற்காக, கோவலன் மீது பழி சுமத்தி விட்டார்கள் என்று துணிகிறாள். இத்தகு தெளிவு கண்ணகிக்கு எப்படித் தோன்றியது? ஆராய்ந்து பிறந்த தெளிவல்ல, கடப்பாட்டின் வழிப்பிறந்த தெளிவு.

காதலில், நட்பில், பழகியவர்களை ஐயப்படுதல்ஆராய்தல் மூலம் நட்பு கெடும்; காதல் கெடும். ஆயினும் தன்னுடைய தெளிவான கருத்தை வலியுறுத்தாமல் கணவனின் வாயிலாகவே தான்் கள்வன் அல்லன் என்று. கேட்டறிய விரும்புகிறாள்; துடிக்கிறாள்.

தனது கணவன், கள்வன் என்று உலகம் பழி காற்றும் படியாக மன்னவன் செய்த தவற்றை நினைத்து நினைத்து, அவள் வெம்புகிறாள். அது சீற்றமாக உருவெடுக்கிறது. கணவனை இழந்த நிலையிலும் கண வனைக் காணவேண்டும். திரும்ப அடையவேண்டும் என்றெல்லாம் ஆவல் கொள்ளாமல் 'அவன் தீதறு நல்லுரை’ கேட்க விரும்புகிறாள்.

தீதறு நல்லுரை யாது? கோவலன், கள்வன் அல்லன் என்பதுதான்். இந்த நல்லுரையைக் கேட்கவே அவள் மதுரைப் பெண்டிரை நாடுகிறாள்; பதில் இல்லை, மதுரைச் சான்றோரை நாடுகிறாள்; பதில் இல்லை. மனித உலக வரலாற்றிலேயே நீதிக்குச் சார்ந்து பேசி வழக்காடும் பழக்கம் இவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது

கடைசியாகத் தன் கணவனைக் கள்வன் என்று பழிசுமத்திக் கொன்ற அரசனையே நாடுகிறாள். நீதி

明。一6 ; : : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/91&oldid=702754" இலிருந்து மீள்விக்கப்பட்டது