பக்கம்:சிலம்புநெறி.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கேட்கிறாள். தேர்ந்து தெளியும்படி கேட்டுக்கொள் கிறாள். அரசனோ, தேர்ந்து தெளிய உடன்பட்டான் இல்லை.

தேர்ந்து தெளிந்து சொல்வதாக, உரியன செய்வ தாகப் பாண்டியன் சொல்லியிருந்தாலும், கண்ணகியின்

சீற்றம் தணிந்திருக்கும். ஆனால், பாண்டியன் "கள்வனைக் கோறல் கடுங்கோலன்று என்று தம் நிலைமையையே சாதிக்கிறான். அதனால்தான்்,

கண்ணகிக்கு ஆற்றொனாத் துயரம் தோன்றி வழக்கைத் தொடுக்கிறாள்.

அப்பொழுதும் அந்தச் சூழ்நிலையிலும் கண்ணகிக்கு ஆத்திரத்தில் பாண்டியன் மீது பழி சுமத்தும் எண்ணம் இல்லை. அறிவார்ந்த நிலையில் வழக்கை வைக்கிறாள். தன் கணவன் கள்வன் அல்லன் என்று பாண்டியன் உணரும்படி செய்கிறாள்.

தன் கணவன் கோவலன் மீது கள்வன் என்று பழி சுமத்திய பாண்டியப் பேரரசன் வாய் மொழியினாலேயே கோவலன் கள்வன் அல்லன் என்ற முடிவைப்பெற்று உலகத்திற்குத் தந்து கோவலனுடைய புகழைக் காப்பாற்றினாள். இன்றும் காப்பாற்றுகிறாள்.

அன்று கண்ணகி பாண்டிய அரசோடு போராடிக் கோவலன் புகழைக் காப்பாற்றத் தவறியிருந்தாளான்ால் இன்று கோவலன் நினைப்பதற்குக்கூட தகுதி அபுடையவனாக இருந்திருக்க மாட்டான். -

வரலாற்று ஏடுகளும் காப்பியங்களும் பழிசுமத்த கோவலனையே காட்டும். கோவலன் வழி வணிகர் குலமும் சோழ நாடும் கூட பழி சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். கண்ணகி, இவ்வகையில் செய்த பணிக்கு ஈடாக உலகத்தில் வேறெதுவுமில்லை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/92&oldid=702755" இலிருந்து மீள்விக்கப்பட்டது