பக்கம்:சிலம்புநெறி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி -191

மதுரையை எரிக்கலாமா?

கண்ணகி, பாண்டியன் அரசவைக் களத்தில் முறை யாக வழக்குரைத்து வெற்றி பெறுகிறாள். நீதியினை நிலைநாட்டுகிறாள். கோவலன் புகழைக் காப்பாற்று .கிறாள். ஆயினும் கண்ணகியின் ஆற்றாமை நீங்க வில்லை; துயர் தணியவில்லை. கண்ணகியின் வெகுளி பொங்கியெழுந்து செயற்படுகிறது. ஆயினும் நெறிமுறை கடந்துவிடவில்லை. கண்ணகி, மதுரையை அழிப்பேன் என்று உறுதி பூணுகிறாள். மதுரையை அழிப்பானேன்?

கோவலன் கள்வனல்லன் என்பது உறுதியாகிவிட்டது. கோவலன் உயிரை முறை கேடாக எடுத்துக்கொண்ட பாண்டிய அரசன் உயிரைக் கொண்டாகிவிட்டது. கணவனை இழந்த கண்ணகி பட்ட துயரை பாண்டிமா தேவி அடைந்து விட்டாள்! இவ்வளவு நடந்த பிறகு ஏன் கண்ணகிக்குச் சினம் அடங்கவில்லை? மதுரையை அழிப்பதற்கு என்ன நியாயமிருக்கிறது?

மனித வாழ்வில் குறைகள், குற்றங்கள் என இருப்பதும் உண்டு. இவற்றில் குறைகள் மன்னிக்கத் தக்கன; மறக்கத்தக்கன. குறைகள் என்பவை வாழ்விய லோடு சம்பந்தப்பட்டவை. அப்பட்டமான தன்னலச் சார்புடைய ஒழுகலாறுகளால், சமூகத்துக்குப் பெரிய தீங்குகள் விளைந்துவிடுவதில்லை.

கோவலன் மாதவியின் பாற் சென்றொழுகியது குறை. ஆதலால் கண்ணகி பொறுத் திருந்தாள். ஆனால் :பாண்டியன் நெடுஞ்செழியன் தன் அதிகாரத்தைப் பயன் படுத்தி ஒருவனைக் கொன்றது குற்றம். இத்தகைய குற்றம் தனி மனிதனிடத்தில் கூட பெரிய தீமை தரும். அது, பலர் உயிரை எளிதில் கொல்லக் கூடிய அரசாணையுடைய அரசனிடத்தில் இருக்குமாயின்

நாட்டு மக்களின் கதி என்னாவது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/93&oldid=702756" இலிருந்து மீள்விக்கப்பட்டது