பக்கம்:சிலம்புநெறி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி (-) 93

தன்னிச்சையான மனப்போக்குக் கொள்ளுதல், தன்னிச்சையாகச் செயற்படுதல் சமுதாய வாழ்வில் பெரிய குற்றம். மானுட சமுதாய அமைப்பில் தன்னிச்சை யாகச் செயற்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்ற இயற்கை நியதியே இருக்கிறது. பிறர் சொல்வதைக் கேட்டு, அறிந்து, தெளிந்து செயற்பட வேண்டும், என்பதற்தாக இரண்டு செவிகள் வழங்கப்பெற்றிருக் கின்றன. ஆனால், கேட்பாரைத் தான்் காணோம்!

அமைச்சர்களாக இருந்தோரும், ஊர்காவலர்களாக இருந்தோரும் அரசன் தங்களுடன் சூழ்ந்து ஆராயாமல், பொற்கொல்லன் சொற்கேட்டு அவ்வழிச் செயற்பட்டு விட்டானே என்று துணுக்குற்றாரில்லை. அங்ங்னம், துணுக்குறாததற்குக் காரணம் இந்நிகழ்வுக்கு முன்பும் மன்னன் அப்படித்தான்் செய்திருப்பான் என்று நம்ப இடமிருக்கிறது

அமைச்சர்களும் மற்றவர்களும் நமக்கு ஏன் பெரிய இடத்துப் பொல்லாப்பு என்று வாளா இருந்து வயிறு வளர்த்திருப்பர் போலும். ஆதலால், ஒரு நாட்டுச் சமுதாய அமைப்பு கெட்டுப் போனால் ஒழிய அரசு தவறு செய்ய முடியாது.

தவறு செய்வதற்கு நேரிடையாக நெடுஞ்செழியன் காரணமாக இருந்தாலும் அவனை இவ்வகைக் குற்ற நெறியில் செலுத்திய அந்த நகரத்து மக்களும் பொறுப் பாவர். ஆதலால் தான்் கண்ணகி குற்றமுடைய ஒர் அரசு தோன்ற, வளரக் காரணமாக இருந்த மதுரையை அழிப்பேன் என்று உறுதி பூணுகிறாள். r

ஆயினும், கண்மூடித்தனமாகவும் அவளுடைய சினம் செல்லவில்லை. வாழ்ந்தாலும் செயலற்றவர்களாக பொதுமைக்குப் பொறுப்பேற்காது ஒதுங்கி வாழ்பவர் களாகக் சிலர் இருக்கத்தான்் செய்வர். அவர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/95&oldid=702758" இலிருந்து மீள்விக்கப்பட்டது