பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

27

“அதுதானே சொன்னேன், நல்ல சமயம் என்று?”

இப்போது விளங்குகிறது, யாருக்கு நல்ல சமயம் என்று. எப்போதும்போல் வந்த எனக்கு முன்பெல்லாம் கிடைக்காத காட்சி இப்போது கிடைக்கப் போகிறது. இது எனக்கு நல்ல சமயம் என்பதில் சிறிதும் ஐயமே இல்லை.”

“எப்படி சரி; வாருங்கள் போகலாம்” என்றான் சேரமன்னன்.

வஞ்சிமா நகரிலிருந்து மன்னனும் சாத்தனாரும் மன்னனுடைய பரிவாரத்தைச் சேர்ந்தவர்களும் புறப்பட்டார்கள். அவன் புறப்பட்டபோது இந்திரனே தன் பரிவாரங்களுடன் புறப்பட்டது போல இருந்தது; மலைகளினிடையே வரும் பேராற்றின் கரையை அடைந்தான் மன்னன். ஆற்றின் இருமருங்கும் அடர்ந்த காடுகள்; அருகருகே வானமுட்டிய மலைகள்; ஆற்றில் அங்கங்கே மணல் திட்டுக்கள். அங்கே பரிவாரத்தோடு தங்கினான் சேர அரசன். மலைப்பகுதிகளில் உள்ள மகளிர் கைகோத்துக் குரவைக் கூத்து ஆடினார்கள். அப்போது அவர்கள் பாடும் பாடல் காற்றிலே மிதந்து வந்தது. மலையும் மலையைச் சார்ந்த இடங்களும் குறிஞ்சித்திணை என்று சொல்வது தமிழ் மரபு. அந்தத் திணைக்குத் தெய்வம் முருகக்கடவுள். அக்கடவுளுக்குப் பூசை போடுகிற பூசாரிக்கு வேலன் என்று பெயர். அவன் ஆவேசம் கொண்டு ஆடிப் பாடுவான். முருகனைத் துதித்து வேலன் பாடும் பாட்டும் அங்கே எதிரொலித்தது. ஒருபுறம் குறமகளிர் தினையைக் குத்தும்போது பாடும் வள்ளைப் பாட்டின்