பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

தனியாகச் செல்ல விரும்பாமல் சேரநாட்டை அடைந்தாள். மன்னர் பிரானுடைய நாட்டுக்கு வந்த சிறப்பால் மீண்டும் தன் நாயகனுடன் கூடித் தேவ லோகம் அடைந்தா ளென்று இவர்கள் சொன்னதனால் தெரியவருகிறது.”

புலவர் கண்ணகியாகிய பத்தினியின் வரலாற்றைக் கூறியபோது யாவரும் ஆவலுடன் கேட்டார்கள். கேட்க கேட்க இரக்கமும் வியப்பும் உண்டாயின. செங்குட்டுவன் முகம் வாட்டம் அடைந்தது. “பாண்டிய மன்னன் செய்த பிழையால் வளைந்த கோலை அம்மன்னன் உயிர் சென்று நிமிர்த்திச் செங்கோலாக்கிவிட்டது. அவன் அறிந்து செய்த பிழை அன்று அது. மன்னர் பதவி சிறந்ததென்றும், இன்பம் தருவதென்றும் பலர் எண்ணுகிறார்கள். அதில் எத்தனை தொல்லைகள் மழை சரியாகப் பெய்யாவிட்டால், குடிமக்கள் மன்னனைக் குறை கூறுவார்கள். செங்கோல் மன்னனாக இருந்தாலல்லவா மழை பொழியும் என்பார்கள். அதனால், மழை இல்லாத போது மன்னர்கள் என்ன பழி வருமோ என்று அஞ்சுவார்கள். யாருக்காவது துயரம் வந்தால் அதற்கும் அரசன்தான் பிணை என்பார்கள். குடிகளைக் காப்பாற்றிக் கொடுங்கோல் இன்றி நேர்மையான முறையில் ஆட்சி புரிய வேண்டும். ஆகவே, மன்னர் குடியில் பிறப்பது துன்பத்துக்குக் காரணமாகுமேயன்றி இன்பம் தருவதன்று. நான் சொல்லுவது சரிதானே?” என்று அவன் சாத்தனார் நோக்கிக் கேட்டான். சாத்தனார் ஒன்றும் பேசவில்லை.

பிறகு தன் பட்டத்தரசியைப் பார்த்து, “புலவர் சொன்ன கதையைக் கேட்டாயே! தன் கணவனது