பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

35

உயிர் பிரிந்தது கண்டு உடனே உயிர் நீத்தாள் பாண்டியன் மனைவி. இந்தப் பத்தினியோ மதுரையை எரித்துவிட்டு வந்தாள். இந்த இருவரிலும் நீ வியப்பதற்கு உரியவள் யார்?” என்று கேட்டான்.

அதற்கு மாபெருந் தேவி, “கணவனுடைய துயரத்தைக் கண்டு பொறாமல் உயிரை நீத்தவள் வானுலகத்தில் சிறப்பை அடையட்டும். அவள் நிலையைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் நம்முடைய நாட்டைத் தேடி வந்த இந்தப் பத்தினிக் கடவுளை நாம் வழிபட வேண்டும்’ என்றாள்.

அது கேட்ட மன்னன் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தான். கண்ணகியாகிய பத்தினிக்குக் கோயில் எடுத்து வணங்கவேண்டும் என்பதையே தன் மனைவி குறிப்பித்தாள் என்று தெரிந்து கொண்டான். அருகில் இருந்த அமைச்சர் தலைவனைப் பார்த்தான். அவன் அரசனது குறிப்பை உணர்ந்துகொண்டான்; “ஆம், பத்தினிக் கடவுளைக் கொண்டாடுவது நம் கடமை“ என்றான்.

“எப்படிக் கொண்டாடுவது?” என்று அரசன் கேட்டான்.

“சிலை செய்து வழிபடலாமே!” என்று அமைச்சன் கூறவே, “எவ்வாறு சிலை செய்வது?” என்று மீட்டும் கேட்டான் மன்னன்.

“தமிழகத்தில் உள்ள பொதியில் மலையிலிருந்து கல் எடுத்து வந்து பத்தினிப் படிமத்தை வடிக்கச் சொல்லலாம்; அல்லது சேர மன்னர்கள் முன்பே தம்முடைய வில் கொடியைப் பொறித்து வைத்திருக்கும்