பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

37

“வேறு எப்படி அவர்களுக்கு நாம் வருவதை அறிவிப்பது?”

“வஞ்சி மாநக்ரில் நமக்குத் தெரியாமல் பல நாட்டு ஒற்றர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்குச் செய்தி தெரியுமானால் தங்கள் அரசர்களிடம் போய்ச் சொல்வார்கள். ஆதலால் நாம் நகரம் சென்று அங்கே வீதிகளில் முரசறைந்து செய்தியை அறிவிக்கும்படி செய்தால் போதுமானதென்று நினைக்கிறேன்” என்று காரணத்துடன் விடை கூறினார், அழும்பில் வேள். மன்னன் அந்தக் கருத்தை ஒப்புக் கொண்டான்.

காணிக்கைகளை வைத்துத் தாம் கண்ட அதிசயத்தையும் சொல்லிவிட்டு விடை பெற்றுக்கொண்டு சென்றார்கள், மலைப்பகுதியிலிருந்தும் காட்டிலிருந்தும் வந்த மக்கள். அரசனும் தன் பரிவாரத்துடன் வஞ்சி மாநகருக்கு மீண்டான்.

நகரை அடைந்தவுடன் முதல் வேலையாக யானை மீது முரசறைந்து செய்தியை அறிவிக்கச் சொன்னான். அப்படி அறிவிக்கும் பணியைச் செய்வதற்குரியவர்கள், “சேர மன்னன் வாழ்க! எம் கோ பல்லாண்டு வாழ்ந்து உலகத்தைக் காப்பாற்றட்டும்! முன்பே சேர மன்னர்கள் தம் அடையாளச் சின்னமாகிய வில்லைப் பொறித்துள்ள இமயமலைக்குச் சென்று, எம் அரசர் பிரான் கடவுள் விக்கிரகம் அமைக்கும் பொருட்டுக் கல் எடுக்க வரப்போகிறான். வடதிசையில் உள்ள மன்னர்கள் எல்லாம் காணிக்கைகளுடன் வந்து எதிர் கொண்டு அழைப்பார்கள் என்று நம்புகிறோம். இல்லையானால் சேரமன்னனுடைய வீரத்துக்கு முன் எதிர்