பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

45

சாபமிட்டு விழுந்து இறந்துபோனாள். அவள் இட்ட சாபந்தான் இப்படி வந்து பலித்தது. பரதன் என்னும் அதிகாரியே கோவலனாக பிறந்தான். பரதனுடைய மனைவியே கண்ணகியாகப் பிறந்தாள்.”

“மிகவும் சோகமான கதை. இதையா மதுரைத் தெய்வம் வீரபத்தினிக்கு உரைத்தது?” என்று, இதுகாறும் கேட்டுக் கொண்டிருந்த இளங்கோவடிகள் வினவினார்.

“இந்தக் கதையைக் கண்ணகியிடம் சொல்லி விட்டு, அந்த வணிகன் மனைவி இட்ட சாபத்தால் இது நிகழ்ந்தது. இன்னும் பதினான்கு நாட்கள் சென்றால் உன் கணவன் வருவான். அவனை வானோர் வடிவிலே காணலாமேயன்றி, இனி மனித உருவத்தில் காண முடியாது” எனக் கூறி மறைந்தது அந்தத் தெய்வம் என்று எஞ்சியிருந்த நிகழ்ச்சியையும் சொல்லி முடித்தார் சாத்தனார்.

இவற்றையெல்லாம் கேட்ட இளங்கோவடிகள் நெடுநேரம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். அவர் தம் அகக்கண்ணில் இந்த வரலாற்றுக் காட்சிகளையெல்லாம் ஒரு முறை வரிசையாகக் கொண்டுவந்து கண்டார்போல் இருந்தது. பின்பு மெல்லச் சாத்தனாரைப் பார்த்து, “பாவம் பாண்டிய மன்னனுடைய முடிவு வருந்தத்தக்கது. அவன் செய்த பிழைக்கு வேறு யாரும் தண்டனை கொடுக்கவில்லை. தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டான். தான் செய்தது அறமன்று என்பதை உணர்ந்தவுடன் அவன் உயிர் பிரிந்தது. அந்த அறமே அவனுக்குக் கூற்றாக நின்று ஒறுத்துவிட்டது. அரசியலில் ஈடுபட்டவர்கள்