பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

71

அணிகலன்களும் ஒரு பக்கம் சேடிமார் ஏந்தி நின்றனர்.

அப்போது சேரமான் அங்கே வந்து தன் பட்டத்தரசியுடன் அங்குள்ள அழகிய அரங்கத்தில் ஏறித் தனக்குரிய இருக்கையில் அமர்ந்தான். அந்தச் சமயத்தில் பறையூரிலிருந்து வந்த சாக்கையன் என்பவன் நடனமாடத் தொடங்கினான். மறையவனாகிய அவன் குலத்தினர் கூத்தாடுவதில் வல்லவர். கொடு கொட்டி என்ற கூத்தை அவன் ஆடிக் காட்டினான். அந்தக் கூத்து முன்பு சிவபெருமான் ஆடியது. அதனை மிகச் சிறந்த வகையில் கூத்தச் சாக்கையன் அபிநயம் பிடித்து ஆடினான். அரசியுடன் இருந்து அந்தக் கூத்தைக் கண்டு களித்த அரசன் அக்கூத்தனுக்குப் பரிசில் வழங்கி விடை கொடுத்தனுப்பினான்.

அப்பால், செங்குட்டுவன் அரசிருக்கை மண்டபத்தை அடைந்தான். கனகவிசயரைப் பாண்டியனுக்கும் சோழனுக்கும் காட்டிவிட்டு வரும்படி முன்பு அவன் அனுப்பியிருந்த பிரதானிகளும், மாடலனும் அப்போது அங்கே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் செங்குட்டுவனைத் தொழுது வாழ்த்தித் தாங்கள் சென்று வந்த செய்தியைச் சொல்லலானார்கள்.

“நாங்கள் முதலில் சோழ மன்னனுடைய புகார் நகரம் சென்றோம், சித்திர மண்டபத்தில் இருந்த வேந்தனை ஆரிய மன்னரோடு சென்று வணங்கினோம். அவன் வடநாட்டில் மன்னர் பிரான் செய்த போரை அறிந்து, ‘தோற்றவர்களைச் சிறைப்பிடித்துக் கொண்டுவருவது வெற்றியாகாது’ என்று தன் படைத்தலைவனிடம் சொன்னான். அதுகேட்டு மனம் வருந்தி,