பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

செல்வமாவது ஓரிடத்தில் நிலையாக நிற்கிறதா? வடவாரிய மன்னர்கள் நிறைந்த செல்வத்தோடுதான் வாழ்ந்தார்கள். இப்போது அவர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். அவர்கள் செல்வம் நிலைக்கவில்லை. ஆகையால் செல்வமும் நில்லாதென்பதை உணர்ந்து கொள்வீர்களாக. இளமையும் நில்லாது என்பதை நான் தனியே எடுத்துச் சொல்லவேண்டுமா? தங்களுக்கே இப்போது இளமைபோய் நரை வந்துவிட்டதே!”

செங்குட்டுவன் பெருமூச்சுவிட்டான்; “நான் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்” என்றான்

“அதைத்தான் சொல்லவருகிறேன். இந்த உலகத்துப் பிறந்த உயிர்கள் இறந்தால் எல்லோரும் ஒரே விதமான கதியை அடைவதில்லை. அவரவர்கள் செய்யும் புண்ணிய பாவங்களுக்கு ஏற்றபடி வெவ்வேறு பிறவிகளை எடுப்பார்கள். மனிதப் பிறவியைப் பெற்றவர்கள் இனிமேல் தாழ்ந்த பிறவிகளைப் பெறமாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை. தேவனாக இருந்தவன் மனிதனாகப் பிறக்கலாம். மனிதனாக இருந்தவன் விலங்காகப் பிறக்கலாம். நாடகத்தில் கோலம் புனையும் கூத்தர்கள் எப்படி மாறி மாறி வெவ்வேறு வேடத்தைப் போடுகிறார்களோ அப்படி இந்த உயிர் வெவ்வேறு பிறவியை எடுத்து வெவ்வேறு உடம்பை அடை கிறது. வினை செலுத்தும் வழியிலே உயிர் செல்லும். இவற்றையெல்லாம் தாங்கள் திருவுள்ளத்தில் எண்ணிப் பார்க்க வேண்டும்.”

செங்குட்டுவன் கண்ணில் இருந்த சிவப்பு மறைந்தது. மாடலன் வார்த்தைகள் மெல்ல அவ்ன் உள்ளத்-