பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

3

பலவகைப் பரிசில்களை வழங்குபவன். அவர்கள் அவனை அருமையான பாடல்களால் பாடிப் புகழ்ந்தார்கள்.

ந்த நெடுஞ்சேரலாதனுக்கு இரண்டு ஆண் மக்கள் இருந்தார்கள். மூத்தவன் செங்குட்டுவன். அவனுடைய தம்பியின் பெயர் இன்னதென்று தெரியவில்லை. எல்லோரும் அவரை இளங்கோ என்று அழைத்தார்கள். இளங்கோ என்பதற்கு இளவரசன் என்பது பொருள்.

நெடுஞ்சேரலாதன் தன் புதல்வர் இருவருக்கும் தக்கபடி ஆசிரியர்களை அமைத்துக் கல்வி கற்பிக்கச் செய்தான். இருவரும் மனம் ஒன்றிப் பயின்று வந்தனர். உடல் வளர வளர அவர்களுடைய அறிவும் வளர்ந்து வந்தது.

சேரமன்னனாகிய நெடுஞ்சேரலாதனுக்கு முதுமைப் பருவம் வந்தது. ஆதலின் தன்னுடைய மூத்த புதல்வனாகிய செங்குட்டுவனை எப்போதும் தன் அருகிலேயே வைத்துக்கொண்டு அரசியல் முறைகளையெல்லாம் பழக்கி வைத்தான். அமைச்சர்களும் படைத்தலைவர்களும் தம் அநுபவத்தாலும் நூல்களாலும் அறிந்த பல கருத்துக்களை அவனுக்குக் கூறினர்கள்.

தனக்குப் பிறகு அரசாட்சி செய்வதற்குரிய செங்குட்டுவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டவேண்டுமென்ற விருப்பம் அரசனுக்கு உண்டாயிற்று. அதை அவன் தன் அவைக்களத்தில் இருந்த பெரியவர்களிடம் சொன்னான். அவர்கள் அப்படியே செய்யலாம்