பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

உண்டு. இந்த ஐந்திலும் முந்தியதும் சிறந்ததுமாக விளங்குவது சிலப்பதிகாரம். அதைப் புலவர்கள் சிலம்பு என்றும் வழங்குவார்கள்.

“சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்” என்று பாரதியார் பாடியிருக்கிறார். அந்தச் சிலம்பு பிறந்து தமிழ்த் தாயின் அணிகலனாக நிலவுவதற்குக் காரணமான நிகழ்ச்சிகளை இதுவரையில் உள்ள வரலாறு தெரிவிக்கிறது. சிலம்பு பிறந்த கதை இதுதான்.



பயிற்சி

1. இளங்கோவடிகள் பயணத்தில் கண்டவைகளைச் சுருக்கி வரைக.

2. இளங்கோவடிகள் துறந்ததற்குக் காரணமான நிகழ்ச்சி யாது?

3. கோவலன் கொலையுண்டதற்குக் காரணம் பழைய வினை யென்பதை விளக்கும் வரலாற்றை எழுதுக.

4. செங்குட்டுவன் வடக்கே படையெடுத்துச் செல்லக் காரணம் என்ன?

5. கடவுள் மங்கலம் செய்த நாளில் நிகழ்ந்தவற்றைச் சுருக்கி எழுதுக.

6. இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் எழுதுவதற்கு என்ன காரணம்?

7. சிலப்பதிகாரத்தை எப்படி எப்படி மக்கள் பாராட்டினார்கள்?