பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எடுத்துக் கொண்டேன். திறனாய்வு பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் உள்ள சில நூல்களைப் படித்துள்ளேன். இதுதான் திறனாய்வு - இவ்வாறு செய்வதுதான் திறனாய்வு என எவரும் வரையறுத்துக் கூறுவதற்கில்லை. ஒவ்வொருவரின் கோட்பாட்டிலும் வேறுபாடு இருக்கலாம். எனவே, எனது திறனாய்வும் ஏதோ ஒருவாறு இருக்கலாம்.

தித்திக்கும் திறனாய்வு எனச் சுருக்தமாகப் பெயர் தரப்பட்டுள்ளது. இதனைத் தித்திக்கச் செய்யும் திறனாய்வு என விரித்துக் கொள்ள வேண்டுகிறேன். அதாவது, சிலப்பதிகார்த்தைத் தித்திக்கச் செய்யும் திறனாய்வு என்பது இதன் கருத்தாகும். சிலப்பதிகாரத்தைத் தித்திக்கச் செய்ய, எனக்குத் தெரிந்த அளவு — என்னால் இயன்ற அளவு முயன்றிருக்கிறேன் — அவ்வளவுதான்.

மற்றும் இளங்கோ சிலப்பதிகாரத்தைத் தித்திக்கும்புடிச் செய்திருக்கும் திறனை ஆய்வு செய்தல் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.

என் கருத்துதட்கு அரணாக, இலக்கிய மேற்கோள்களும் உலக வழக்குத் தொடர்களும் செய்திகளும் ஓரளவு தந்துள்ளேன். நகைச்சுவைக்காகச் சில தொடர்களும் செய்திகளும் இந்துள்ளேன். அவற்றைத் கொச்சையாக எண்ணாதிருக்க வேண்டுகிறேன். இடையிடையே மாற்றுச் சுவை வேண்டுமல்லவா?

கூறியது கூறல்

பலரோடு – பலவற்றோடு தொடர்புடைய ஒரு கருத்தே, அவரவரைப் பற்றியும் – அவையவை பற்றியும் கூறியுள்ள பகுதிகளில் திரும்பத் திரும்ப வரலாம். ‘கூறியது கூறினும் குற்றம் இல்லை - வேறொரு பொருளை விளைக்குமாயின்’ என்னும் கோட்பாட்டின்படி, இத்தகைய கூறியது கூறலை அன்புகூர்ந்து பொறுத்தருள வேண்டுகிறேன். மூளைக் கட்டிப் பிணி தொடர்பான தொல்லையோடு எழுபதாம் அகவையைக் கடந்துவிட்ட அடியேன் இயன்றதைச் செய்துள்ளேன். ஏற்றருள்க.

இந்நூலை நன்முறையில் அழகாக வெளியிட்ட புத்தக வித்தகர் மதிப்புமிகு ஏ. திருநாவுக்கரசு அவர்கட்கு மிக்க நன்றி செலுத்துகிறேன். சபாநாயகர் அச்சகத்தாருக்கும் நன்றி. வணக்கம்.

புதுச்சேரி-11
15 – 9 – 1992

சுந்தர சண்முகன்