பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

100



வாசித்தல் மிகவும் சிறப்பானது. அதாவது - நாற் பெரும் பண்ணிற்கும் முதலாகிய நால் வகை யாழினுள்ளும் செங்கோட்டு யாழிலே அறுவகை உறுப்பினுள் தந்திரிகரம், திவு என்னும் இரண்டையும் உறுதி பெறக் கட்டி வாசித்தான்.

ஊர் காண் காதை 'எண்ணெண் கலையோர் இரு பெரு வீதி (323 ஆம் அடி) - அதாவது (8X8=64) அறுபத்து நான்கு கலைகளில் வல்லவர்களின் தெருக்கள் மதுரையில் இருந்ததாம். ஒன்பான் மணிகள் தொடர்பான கலை வல்லுநர் இருந்தனராம்.

கட்டுரை காதை: வான நூல் கலையறிவு அன்றிருந்தது. மதுரையை எரி யுண்ணுதற்கு முன்பே, ஆடித் திங்கள் - தேய் பிறைப் பருவத்தில் காத்திகை மீனும் அட்டமி திதியும் கூடிய ஒரு வெள்ளிக்கிழமையில் மதுரை எரியுண்ணப்படும் - அரசும் கேடுறும் - என்பது அறிவிக்கப்பட் டிருந்ததாம்.

"ஆடித் திங்கள் பேரிருள் பக்கத்து
அழல்சேர் குட்டத்து அட்டமி ஞான்று
வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண"
(23:133-135)

என்பது பாடல் பகுதி. இப்பகுதி வான நூல் கலை.

நீர்ப் படைக் காதை: கணிக் (சோதிடக்) கலை யறிவு:- சேரன் செங்குட்டுவன் ஒரு நாள் கங்கைக் கரையில் மாலை வேளையில் விண்ணில் பிறை தோன்றியதைக் கண்டான். உடனே கணியன்.(சோதிடன்), வஞ்சி நீங்கி முப்பத்திரண்டு திங்கள் ஆகிறது எனக் கூறினானாம். வான நூல் கலை யோடு கணி நூல் கலை ஒற்றுமை உடையது.

நடுகல் காதை: சேரன் செங்குட்டுவன், போரில் வெற்றி வாகை சூடி வந்த மறவர்கட்கு, அகவல் மகளிரால் யாழிசை விருந்து அளித்தானாம். அதாவது:- வளைந்த தண்டினையும் இசை பொருந்தும் நரம்பினையும் பத்தரையும் உடைய