பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

சுந்தர சண்முகனார்



கல்லைக் கொண்டே யானறிவேன். குளித்து விட்டு, நெற்றியில் திருநீறு அணிந்து, நடுவில் சந்தனச் சாந்துப் பொட்டு இட்டு, அதன் நடுவில் சிறிய அளவில் குங்குமப் பொட்டு வைப்பது இளமைக்காலச் செயல். இப்போது வீடுகளில் வட்டக்கல் அருகியுள்ளது.

ஈண்டு நெடுநல் வாடை என்னும் நூலில் உள்ள

"இருங்காழ் அகிலொடு வெள்ளயிர் புகைப்ப" (56)
"வடவர் தந்த வான்கேழ் வட்டம்
தென்புல மருங்கின் சாந்தொடு துறப்ப" (51, 52)

என்னும் பகுதிகள் ஒப்பு நோக்கற் பாலன. சொல்லிச் செய்தாற்போல, இரு நூல்களிலும் இவை ஒத்துள்ளமை வியப்பு அளிக்கிறது.

மேலுள்ள பாடல் பகுதியால், மேற்கே யிருந்து அயிரும், கிழக்கேயிருந்து அகிலும், வடக்கிலிருந்து வட்டக் கல்லும், தெற்கிலிருந்து சந்தனக் கட்டைகளும் வரவும் விற்கவுமான வாணிகம் நடைபெற்றது என்பதை அறியலாம்.

புகார், கடற்கரையில்தானே இருந்தது. அதன் கிழக்கே கடலாயிற்றே - கிழக்கிலிருந்து அகில் எப்படி வரும்? - என்னும் ஐயம் எழலாம். உள்நாட்டில் அகில் விளையும் இடத்திலிருந்து கிழக்கேயுள்ள கடல் வழியாகக் கப்பல்கள் கொண்டு வரலாம் அல்லவா? மற்றும் கடல் தாண்டிக் கிழக்கேயுள்ள - வங்கக் கடலின் கீழ்பாலுள்ள நாடுகளி லிருந்தும் வரலாம் அன்றோ? மற்ற மூன்று திக்குகளி லிருந்து கடல் வழியாகக் கப்பல் வாயிலாக வரவேண்டும் என்ப தில்லை - தரை வழியாகவே வரலாம். .

இந்திர விழவு ஊர் எடுத்த காதை

மருவூர்ப் பாக்கம்:

புகார் நகரில் மருவூர்ப் பாக்கம், பட்டினப் பாக்கம் என்னும் இரு பகுதிகள் இருந்தன. புதுச்சேரியிலும்,