பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

சுந்தர சண்முகனார்


சென்று ஊரில் ஒரே அலராயிருக்கிறது என்று கூறி அழைத்து வா என்றாளாம்;

"வயந்த மாலையை வருகெனக் கூஉய்ப்
பயங்கெழு மாநகர் அலர்எடுத்து உரையென"
(2:8, 9)

என்பது பாடல் பகுதி. இரட்டைக் காப்பியங்களாகிய சிலப்பதிகாரத்தாலும் மணிமேகலையாலும் இப்படியொரு மரபு இருந்தது புலனாகிறது. இந்தக் காலத்திலும், இதை விடக் குறைந்த அளவில் இம்மரபு எங்கெங்கோ பின்பற்றப் படுவதாகச் சொல்லப்படுகிறது. அந்தக் காலத்தில் அரசெதிரே அரங்கேற்ற வேண்டுமெனில், இந்தக் காலத்தே பெருந்தலைவர் யாராவது ஒருவர் முன் நடைபெறுகிறதாம். போகப்போக இதுவும் குறைந்து - பின் அறவே நீங்கிவிடும். காலம் மாறும் தன்மையது.

முடங்கல்

இந்தக் காலத்தில் முடங்கல் (கடிதம்) அஞ்சல்துறை வாயிலாகத் தொலைவையும் நேரத்தையும் வென்று விடுகிறது. பிறகு தொலைபேசி - பின்பு தொலைக் காட்சி - இப்படியாகக் கருத்துப் பரிமாற்றம், ஒரே நேரத்தில் - இடையீடு இன்றி உடனுக்குடன் நடைபெறுகிறது. அறிவியலின் திருவிளையாடல் இது. தமிழ் இலக்கியங்களுள் சிலப்பதிகாரத்தில் தான் முடங்கல் எழுதும் முறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. மாதவி, வயந்த மாலை வாயிலாகவும் கோசிகன் வாயிலாகவும் இருமுறை கோவலனுக்கு முடங்கல் அனுப்பினாள். இந்த மரபு அந்தக் காலத்திலேயே தொடங்கப்பட்டது.

பத்தினி வழிபாடு

தமிழ் நூல்களுள் சிலப்பதிகாரத்தில் தான் பத்தினி வழிபாடு முதல் முதல் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது எனக் கூறலாம்போல் தோன்றுகிறது. நடுகல் வழிபாட்டை இங்கே