பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

127



கொள்ளலாகாது, செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோட்டம் எடுத்துப் பத்தினி வழிபாட்டைத் தொடங்கிவைத்தான். மற்றும், சிறைவீடு பெற்ற கனக விசயர் முதலிய ஆரிய மன்னர்களும், சிறைவீடு பெற்ற வேறு மன்னர்களும், குடகக் கொங்கரும், மாளுவ வேந்தரும், இலங்கைக் கயவாகு மன்னனும், கண்ணகித் தெய்வத்தை விளித்து, எங்கள் நாடுகளிலும் எழுந்தருளி அருள்புரிய வேண்டும் என வேண்டினராம்.

"உலக மன்னவன் நின்றோன் முன்னர்
அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்
எம்நாட் டாங்கண் இமய வரம்பனின்
நன்னாள் செய்த நாளணி வேள்வியில்
வந்து ஈகஎன்றே வணங்கினர் வேண்டத்
தந்தேன் வரமென்று எழுந்தது ஒருகுரல்"
(30:156-164)

என்பது பாடல் பகுதி. இதனால், வடபுல மன்னர்களும் பத்தினிக்குக் கோயில் எடுத்தனர் என்பது தெளிவு. இவ்வாறு நாவலந் தீவு (இந்தியா) முழுவதும் பரவியிருந்த கண்ணகி வழிபாடு, பாரதக்கதை தென்புலத்தில் பரப்பப்பட்ட பின்னர் மறையலாயிற்று. இப்போது தமிழ் நாட்டில் உள்ள துரோபதையம்மன் கோயில்கள் முன்னர்க் கண்ணகி கோயில்களாக இருந்தவை என்றும் அதாவது கண்ணகியின் இடத்தைத் துரோபதை பிடித்துக் கொண்டாள் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் அம்மன் கோயில் கொண்டுள்ள பெண் தெய்வங்கள் அனைவரும் மக்கள் பெண்டிரே. மாரி (மழை) பெய்ய வைப்பதால் மாரியம்மன் என்ற பெயருள்ள அம்மன்-