பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

139


ஒரு கருத்து சொல்லப் படுவதுண்டு. ஆனால், இடியுண்ட மயில்போல் ஏங்கி அழுதாள் என்பதை நோக்குங்கால் இடி இடித்தால் மயில் அஞ்சித் துன்புறும் என்பது போன்ற கருத்தே கிடைக்கிறது. இது சரியா?

இங்கே ஞானசம்பந்தரின் திருவையாற்றுப் பதிகத்தில் உள்ள தேவாரப் பாடல் ஒன்று நினைவைத் தூண்டுகிறது. மயில்கள் நடனம் ஆடுகின்றனவாம் - முகில் இடி இடிக்கிறதாம் - நடனத்தைக் கண்டதும் இடியொலியைக் கேட்டதும் மழை வருமோ என அஞ்சி மந்திகள் (குரங்குகள்) மரத்தின் உச்சியில் ஏறி மழைவரும் நிலைமையைத் தெரிந்துகொள்ள முகிலைப் பார்த்தனவாம்.

"வலம்வந்த மடவார்கள் நடமாட
முழவுஅதிர மழைஎன்று அஞ்சிச்
சிலமந்தி அலமந்து மரமேறி
முகில் பார்க்கும் திருவையாறே"
(3:1)

என்பது பாடல் பகுதி. நடனம் ஆடும் மயில்கள் கோயிலைச் சுற்றிவரும் மடவாரே. அவர்கள் நடப்பது ம்யில்கள் நடப்பது போல் தெரிகின்றதாம். இடியொலி என்பது கோயிலில் அடிக்கும் முழவின் ஒலியே, மடவாரின் நடையை மயில் நடையாகவும் முழவொலியை இடியொலியாகவும் மந்திகள் மாறி எண்ணிவிட்டனவாம். ஞானசம்பந்தரின் இந்த்ப் பாடலில் உள்ள இலக்கிய நயம் மிகவும் சுவைக்கத் தக்க்து.

மயில் தொடர்பாக இந்தப் பாடலிலிருந்து கிடைப்பது இடியொலியுடன் மழைவரும் அறிகுறி தோன்றின் மயில்கள் மகிழ்ச்சியுடன் நடனமாடும் என்னும் செய்தியாகும். இளங்கோவின் பாடலுக்கும் ஞானசம்பந்தரின் பாடலுக்கும் இடையே முரண்பர்டு தெரிகிறதே. இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன? ஒருவேளை, மிகவும் கடுமையாகத் தொடர்ந்து