பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

சுந்தர சண்முகனார்


என்பது உவமைப் பகுதி. இறைமகன் = சேரமன்னன். செவ்வி = நேரில் காணும் நேரம். யாங்கணும் பெறாது = எவ்விடத்தும் பெறாமல். அதாவது, கப்பம் கட்டத் தலைநகர் வஞ்சி சென்றும் காணமுடியவில்லை. மலைவளங் காண மன்னன் சேரன் சென்றுள்ளான் என்று அறிந்து அங்கே சென்றும், விரைவில் - எளிதில் காணமுடிய வில்லையாம். இது சேரன் பெருமைக்குச் சான்று. இந்தக் காலத்திலும், பெரிய மனிதர்கள் என்று தங்களை எண்ணிக் கொண்டிருக்கும் மேதைகள் சிலரைக் காண நெடுநேரம் வரிசையில் காத்திருப்பது உண்டல்லவா?

கால்கோள் காதை:- சேரன் செங்குட்டுவன் பகைவ ரோடு போர் புரிய வஞ்சியினின்றும் புறப்பட்டு எழுந்தது, அரக்கரோடு போர்புரிய இந்திரன் புறப்பட்டதுபோல் இருந்ததாம்.

"தானவர் தம்மேல் தம்பதி நீங்கும்
வானவன் போல வஞ்சி கிங்கி"
(26.78, 79)

தானவர் = அரக்கர், தம்பதி = இந்திரன் நகரம். வானவன் = இந்திரன்.

இரை வேட்டு எழுந்த அரிமா (சிங்கம்) யானைக் கூட்டத்தின்மேல் பாய்ந்தாற்போல் சேரன் பகைவர்கள்மேல் சிறிப்பாய்ந்தானாம் .

"இரைதேர் வேட்டத்து எழுந்த அரிமாக்
கரிமாப் பெருமிரை கண்டுஉளம் சிறந்து
பாய்ந்த பண்பின்"
(26.188.190)

என்பது உவமைப்பகுதி.

முகமதியம்

செங்குட்டுவன் கால்களில் அணிந்துள்ள கழல்கள், அவன் வென்று அடிமையாக்கிய மன்னர்களின் முடியைத்