பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

147


தேய்க்கின்றனவாம். பகைவர்க்கு அவ்வாறு இருக்கும் சேரன் தன் குடிமக்கட்கு அருள் புரியும்போது அவனது மலர்ந்த குளிர்ந்த முகத்தைப்போல் மூதூரில் திங்கள் தோன்றியதாம்

"முடிபுறம் உறிஞ்சும் கழல்கால் குட்டுவன்
குடிபுறங் தருங்கால் திருமுகம் போல
உலகுதொழத் தோன்றிய மலர்கதிர் மதியம்
பலர்புகழ் மூதூர்க்குத் காட்டி நீங்க"
(28:37.40)

பெண்களின் முகத்திற்குத் திங்களை உவமையாகச் சொல்வது பெருவாரியான வழக்கு. இங்கே திங்களுக்குச் சேரன் முகம் ஒப்பாக்கப் பட்டிருப்பது ஒரு புதிய ஆட்சி. இது குளிர்ச்சி கருதிக் கூறப்பட்டுள்ளது. (பிறைமதி உலகு தொழத் தோன்றுகிறது.)

பகைவரிடம் கடுமையாகப் போரிடும் பெரிய யானை, சிறார்களிடம் மென்மையாக நடந்து கொண்டு, நீர்த்துறையில் தன் கொம்புகளைக் கழுவும் அவர்களுடன் விளையாடுவது போல, அதியமான் பகைவர்களிடம் கடுமையாய் நடந்து கொள்ளினும் ஒளவையார் போன்ற புலவர் பெருமக்களிடம் இனிமையாய் நடந்து கொள்வான் என்னும் கருத்தில் ஒளவையார் பாடிய புறநானூற்றுப் பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. பாடல்;

"ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எனக்கே மற்றதன்
துன்னருங்கடாஅம் போல்
இன்னாய் பெருமகின் ஒன்னா தோர்க்கே"
(94)

இதுபாடல். எவ்வளவு நயமான கருத்து!

வாழ்த்துக் காதை - உரைப்பாட்டு மடை:- வடபுலம் சென்று இமயமலையிலிருந்து சிலை செய்தற்கு வேண்டிய கல்லைக் கொணரவேண்டும் என்றிருந்த சேரன் செங்குட்டு வனிடம், வடமன்னர்கள் தென்புல மன்னர்களை