பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

சுந்தர சண்முகனார்


இகழ்ந்தனர் என்ற செய்தி கூறினதும் அவன் கொதித்து எழுந்ததற்கு உவமையாக, இயல்பாகவே உருண்டு கொண்டிருக்கும் மணிவட்டை (சக்கரத்தை) ஒரு குறுந்தடி கொண்டு தள்ளி மேலும் விரைந்து ஓடச் செய்யும் செயல் உவமையாக்கப்பட்டுள்ளது. "உருள்கின்ற மணிவட்டைக் குணில்கொண்டு துரந்தது போல்" என்பது உவமைப் பகுதி - (29; உரைப்பாட்டு மடை)

நூலின் இறுதியில் 'நூற் கட்டுரை' என்னும் தலைப்பில் ஒரு நயமான - திறமையான உவமை கூறப்பட்டுள்ளது. ஒரு முகம்பார்க்கும் கண்ணாடியிலே நீண்ட பெரிய மலையைக் காட்டிக் காணச் செய்யும் அற்புதம் போல, ஒரு பெரிய வரலாறு சிலப்பதிகாரம் என்னும் நூலில் அடக்கிச் சொல்லப்பட்டுள்ளது - பாடல்:

"ஆடி கிழலின் டிேருங் குன்றம்
காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து
மணி மேகலைமேல் உரைப்பொருள் முற்றிய
சிலப்பதி காரம் முற்றும்" (15.18)

இது பாடல் பகுதி.

உருவகம்

மீார்சு

அத்தி வானத்திலே திங்களாகிய அரசன் தோன்றி மாலையாகிய பகையை ஒட்டிப் பால்கதிர் பரப்பி விண்மீன்களாகிய குடிகளை ஆளுவதாக உருவகம் செய்யப் பட்டுள்ளது.

"அந்தி வானத்து வெண்பிறை தோன்றிப்
புன்கண் மாலைக் குறும்பு எறிந்து ஒட்டிப்
பான்மையின் திரியாது பால்கதிர் பரப்பி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து" (4:23-26)