பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

157



போன்ற அறிகுறியுடன் பாடல்கள் அமைந்திருந்தன. குறும்புக்காகக்கூட - விளையாட்டிற்காகக்கூட இவ்வாறு ஒரு குறிப்பு வைத்திருக்கலாம். பாடல்களின் கருத்துகள் சுருக்கமாக வருமாறு:

1. ஆற்று வரி - வாழி காவேரி

காவிரியே! சோழன் கங்கையைப் புணர்ந்தாலும் நீ புலவாய் - அது கற்பு - வாழி. சோழன் குமரியொடு கூடினும் நீ புலவாய் - அது கற்பு வாழி, புதுப்புனலுடனும் பேரொலியுடனும் நீ செல்வது சோழனுக்கு வளமேயாகும் - வாழி காவேரி - என்று முதலில் பாடினான். இந்த மூன்று கருத்துகட்கும் உரிய மூன்றுபாடல்களை மட்டும் இங்கே காண்பாம்.!

“திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஓச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயல் கண்ணாய்
மங்கை மாதர் பெருங்கற்பு
என்றறிந்தேன் வாழி காவேரி"(2)

“மன்னு மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாதொழிதல் கயல் கண்ணாய்
மன்னு மாதர் பெருங்கற்பு

என்றறிந்தேன் வாழி காவேரி"(3)